முகப்பு /மதுரை /

மதுரையில் களைகட்டும் சித்திரை திருவிழா.. கள்ளழகருக்கு நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்..

மதுரையில் களைகட்டும் சித்திரை திருவிழா.. கள்ளழகருக்கு நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்..

X
நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

Madurai Kallazhagar Festival 2023 : மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வையொட்டி பக்தர்கள் அனைவரும் வைகை ஆற்றங்கரையோரம் நேர்த்திக்கடனாக மொட்டை அடித்துக்கொண்டனர்.

  • Last Updated :
  • Madurai, India

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், சித்திரைத் திருவிழாவின் முக்கியமான நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்ற நிலையில், இரவு முதலே கள்ளழகரைக் காண்பதற்காக மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள மக்கள் வெளி மாவட்ட மக்கள் என இலட்சக்கணக்கான மக்கள் வைகை ஆற்றுப்பகுதியில் சூழ்ந்து காலையில் கள்ளழகரை தரிசனம் செய்தனர்.

இதில் கள்ளழகர் நண்பகல் 3 மணி அளவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலிலிருந்து புறப்பாடாகி பல்வேறு மண்டகப்படிகளை சுற்றி வந்து பின்பு பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளி மக்கள் அனைவருக்கும் காட்சியளித்தார்.

இந்நிலையில் கள்ளழகரைக் காண வந்த பக்தர்கள் அதாவது வெளி மாவட்டம் வெளியூர் பகுதியில் இருந்து வந்தவர்கள், தரிசனம் செய்து பின்பு, ஆழ்வார் புரம் பகுதியிலிருந்து செல்லூர் பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரம் தங்கள் குழந்தைகள், பெரியவர்கள் பலரும், கள்ளழகருக்கு நேர்த்திக்கடனாக மொட்டை அடித்து ஆற்றங்கரையில் குளித்து தனது நேர்த்திக் கடனை செய்து கொண்டனர். இது போக பெண்கள் கள்ளழகருக்காக பூ முடி எடுத்துக்கொண்டனர்.

கள்ளழகருக்கு நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்

கள்ளழகர் தனது குலதெய்வமாக இருப்பதினாலும், மொட்டை அடிக்க வேண்டும் என்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் வேண்டிக்கொண்டு, கள்ளழகர் தரிசனம் செய்துவிட்டு ஆற்றங்கரையோரம் மொட்டை எடுத்து வருவது என்பது வழக்கமாகவே உள்ளது.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தலைமுறை தலைமுறையாகக் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் தினம் என்று தனது குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்தியும் வருகின்றார்கள். மேலும் மொட்டை அடிப்பவர்களும் பரம்பரை பரம்பரையாக இத்தொழிலை செய்து வருகின்றார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    அதாவது மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் கள்ளழகரை தரிசனம் செய்துவிட்டு பின்பு தனது பாரம்பரியமான முறையில், தொண்டிற்காகவும் ஆற்றங்கரையோரம் இவர்கள் பக்தர்களுக்கு மொட்டை அடித்து வருவது என்பதையும் வழக்கமாகவே வைத்துள்ளார்கள். அந்த வகையில் கள்ளழகர் வழிகாட்டி எழுந்தருளும் நிகழ்வை முன்னிட்டு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக வைகை ஆற்றங்கரையோரம் தொடர்ந்து மொட்டை அடித்து வருகின்றார்கள்.

    First published:

    Tags: Local News, Madurai