முகப்பு /மதுரை /

மதுரை கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள்.. அழகருக்காக தொண்டு செய்ய புறப்பாடு!

மதுரை கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள்.. அழகருக்காக தொண்டு செய்ய புறப்பாடு!

X
மதுரை

மதுரை கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள்

Madurai Chithirai Festival 2023 : மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் அழகருக்கு தொண்டு செய்வதற்காக புறப்பட்டனர்.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான, கள்ளழகர் வைகை ஆற்றல் எழுந்தருளும் நிகழ்வை ஒட்டி, பக்தர்கள் அனைவரும் கள்ளழகர் வேடமணிந்து தண்ணீர் பீச்சி அடிப்பது என்பது வழக்கம்.

இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் பாரம்பரியமான முறையில் கள்ளழகர் வேடமனையும் பறவை பகுதியைச் சேர்ந்த பக்தர் கூறுகையில், நாங்கள் பறவை பகுதியில் இருந்து இந்த பரம்பரமான முறையை செய்து கொண்டிருக்கின்றோம். நான் சிறுவயதில் இருந்து தற்போது வரை செய்து கொண்டிருக்கின்றேன்.

மதுரை கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள்

என்னை போல் இங்கு உள்ளவர்களும் பாரம்பரியமான இந்த பணியை செய்து வருகிறார்கள். நாங்கள் அனைவரும் தண்ணீர் பீச்சுவதற்காக ஊரிலிருந்து கிளம்பி ஊரில் உள்ள தெய்வங்களை கும்பிட்டு கொட்டடித்து இங்கிருந்து கிளம்பி விளாங்குடி பாத்திமா காலேஜில் உள்ள வழிவிடு பெருமாளை வணங்கி விட்டு, அங்கிருந்து தத்தனேரி வழியாக தல்லாகுளம் பெருமாள் கோவில் எதிர்சேவை எதிர் சென்று அவரை வரவேற்று, பின்பு சோனை முத்தையா திருக்கண்ணிலிருந்து அங்கிருந்து அழகர் ஆற்றில் இறங்கும் போது அவரை வரவேற்போம்.

இதையும் படிங்க : மதுரையில் களைகட்டும் சித்திரை திருவிழா.. கள்ளழகருக்கு நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்..

பின்பு மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று, அங்கே மீனாட்சியை வணங்கி மறுபடியும் ராமராயர் மண்டபம் சென்று, அங்கு கள்ளழகருக்கு தண்ணீர் பீச்சும் தீர்த்தவாரி நிகழ்வில் பங்கேற்போம். அதில், மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் அனைவரும் வருவார்கள். அதனைத் தொடர்ந்து வண்டியூர் சென்று அங்கு கள்ளழகரின் தரிசனம் செய்து பின்பு மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் கோவிலுக்கு சென்று அங்கு அம்மனை வழிபடுவோம்.

இவ்வாறு இரவு தொடங்கி மறுநாள் இரவு வரை மதுரையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கள்ளழகர் கூடவே சென்று அவருக்கு தொண்டு செய்து மீண்டும் இரவுவரை வந்து விடவும் இவைதான் கால காலமாக எங்கள் முன்னோர்கள் வழிபட்டதை தற்பொழுது, அப்பாவும் நானும் என் பிள்ளைகளும் பரம்பரை பரம்பரையாக செய்து கொண்டு வருகிறோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் நாங்கள் கள்ளழகர் ஆட்டம் ஆடி கள்ளழகர் நகரை வர்ணிக்கும் விதமாக வர்ணிப்பு பாடல்களை பாடி மதுரை முழுவதும் சுற்றி வலம் வந்து அழகருக்காக பரம்பரை பரம்பரையாக தொண்டு வினை செய்து வருகிறோம் என்று கூறினார்.

First published:

Tags: Local News, Madurai