ஹோம் /மதுரை /

மதுரை மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்களின் விவரம்..!

மதுரை மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்களின் விவரம்..!

மதுரை மின்தடை

மதுரை மின்தடை

Madurai District Power Shutdown | மதுரை மாவட்டம் மதுரை திருப்பாலை துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் மதுரை திருப்பாலை துணை மின்  நிலையத்தில் நாளை வியாழக்கிழமை (அக்டோபர் 13) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் மதுரை திருப்பாலை துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதையும் படிங்க : மதுரைக்கு இயக்கப்படும் ரயில்களின் நேர மாற்றம்- தெற்கு ரயில்வே அறிவிப்பு

இதனால், நாளை பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின்தடை செய்யப்படும் இடங்கள் :

திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, சூர்யாநகர், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், மகாலட்சுமிநகர், உச்சபரம்புமேடு, பார்க்டவுன், தபால் தந்தி காலனி, பாமாநகர், பம்பா நகர், பொறியாளர் நகர், குடிநீர் வடிகால் வாரிய காலனி, சொக்கிகுளம், சண்முகாநகர், விஜய் நகர், கலைநகரின் சில பகுதிகள், மீனாட்சி நகர், இ.பி.காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Madurai, Power Shutdown