வைகை ஆற்றின் ஒப்புலா தரை பாலம் இடிக்கப்பட்ட மேம்பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையில் வடக்கரை மற்றும் தென்கரை பகுதி மக்கள் கோரிபாளையம் சிம்மக்கல் போன்ற பகுதிகளுக்குச் செல்ல ஏவி பாலம், யானைகள் மேம்பாலமும் வைகைக் கரை பகுதிகளான ஆழ்வார்புரம் ,மதிச்சியம் போன்ற இடங்களுக்கு செல்ல ஏதுவாக தரைப் பாலங்கள் இருந்தன. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் முன் சீருமிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.23 கோடிகள் மதுரையில் பழுதடைந்த பாலங்கள் இடிக்கப்பட்டன. அந்த வகையில் குருவிக்காரன் சாலை பாலம் இடிக்கப்பட்ட மேம்பாலம் கட்டப்பட்டு போக்குவரத்திற்கு வந்தது. வைகை ஆற்றின் ஒப்புலா தரை பாலம் இடிக்கப்பட்ட மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மந்தமான நிலைகள் நடைபெற்று வருவதால் மதுரை அண்ணா பஸ் நிலையம், கோரிப்பாளையம், தல்லாகுளம், மதிச்சியம், ஆழ்வார்புரம், முனிச்சாலை, நெல்பேட்டை, கீழவழி வீதி, கீழவாசல் போன்ற பகுதிகளுக்கு செல்லக்கூடிய மக்கள் அனைவரும் ஏவி மேம்பாலம், யானைகள் மேம்பாலம் மூலமாக கடந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகமாக உள்ளது. மேம்பாலம் கட்டும் பணி விரைவில் முடிந்து செயல்பாட்டிற்கு வந்தால் மதுரையின் பல்வேறு முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் மதுரையின் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்திருதல் நிகழ்வு உபுலா படித்துறை பகுதியில் முக்கிய பங்கு வகிக்கும். ஏனென்றால் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இப்பகுதியில் திரளுவார்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் இரண்டு பேர் உயிரிழந்தார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவுக்காக படித்துறை மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai