Home /madurai /

மதுரையில் கூட்டுறவு சங்களில் நாளை கடன் வழங்கும் முகாம்- விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

மதுரையில் கூட்டுறவு சங்களில் நாளை கடன் வழங்கும் முகாம்- விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரை மாவட்டத்தில் நாளை அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
    மதுரை மாவட்டத்தில் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் யார் யாருகெல்லாம் கடன் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் அனைத்து கூட்டுறவு சங்களிலும் கடன் முகாம் 29ம் தேதி துவங்கியுள்ளது. இந்த முகாமானது, நாளை வரை நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக பயிா்கடன், கால்நடை வளர்ப்புக் கடன், மாற்று திறனாளிகள் கடன், ஆதரவற்ற விதவை மற்றும் கணவரால் கை விடப்பட்டோா் கடன், டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ , மகளிா் சுயஉதவிக் குழு கடன், நகைக்கடன் ஆகியன வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் ஆகஸ்ட் 29, 30 ஆம் தேதிகளில் கடன் முகாம் நடைபெறுகிறது.

    பொதுமக்கள் தங்களது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், மத்திய கூட்டுறவு வங்கி கிளை, நகர கூட்டுறவு வங்கி கிளை, நகரக் கூட்டுறவு சங்கம், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகளை அணுகிப் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகா் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி