முகப்பு /மதுரை /

கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் ஈகோ பார்க்கில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் ஈகோ பார்க்கில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

X
திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் ஈகோ பார்க்

Tiruparangunram Eco Park | கோடை விடுமுறையை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் ஈகோ பார்க்கில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என கூட்டம் அலைமோதுகிறது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள ஈகோ பார்க்கில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

கோடை விடுமுறையை முன்னிட்டு மக்கள் அனைவரும் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு இடத்திற்கு சென்று கோடை விடுமுறையை கொண்டாடுவார்கள். அந்த வகையில் மதுரை மக்கள் அனைவரும் திருப்பரங்குன்றம் கோயில் பகுதியில் இருக்கக்கூடிய திருப்பரங்குன்றம் ஈகோ பார்க்கில் குழந்தைகளுடன் சேர்ந்து விடுமுறையை கொண்டாடும் வகையில் வருகை தந்ததால் இந்த பகுதி முழுவதும் கூட்டம் அலைமோதுகிறது.

திருப்பரங்குன்றம் ஈகோ பார்க்

மரம், செடி என்று மிகவும் பசுமையாக இருக்கக்கூடிய இந்த பார்க்கில் சர்க்கஸ், ஊஞ்சல், சீசா, குட்டி குட்டி ராட்டினங்கள் இருப்பதால் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடுகின்றனர். இதுபோக இந்த கோடை விடுமுறையை முன்னிட்டு மக்கள் அதிகமாக இந்த பகுதியில் வரவேற்பு தந்ததால் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை என அனைவரும் விளையாட கூடிய வகையில் டோரா டோரா, வாட்டர் போட்டிங், ஜம்பிங் பவுன்ஸ், டிரைன், கார், பெரிய பெரிய ராட்டினங்கள் என அனைத்து விளையாட்டுத் தளங்களும் தற்போது புதிதாக இந்த பார்க்கில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த பார்க்கில் மக்கள் அனைவரும் பிக்னிக் போக கூடிய வகையில் உணவை எடுத்துக்கொண்டு வந்து இந்த கோடை விடுமுறையை குழந்தைகளுடன் சேர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர். இதுபோக இந்த பார்க்கில் சுற்றி பார்க்க பல்வேறு இடங்கள் உள்ள நிலையில் அதற்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 20 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Madurai