கொல்லம் - சென்னைக்கு இயக்கப்படும் கொல்லம் எக்ஸ்பிரஸ் S3 கோச்சில் விரிசல் ஏற்பட்டது. வழக்கமான சோதனையின் போது இந்த விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து செங்கோட்டை வழியாக சென்னைக்கு நாள்தோறும் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பகல் 12 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் ரயில், மாலை 3.10 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். பின்னர் அங்கிருந்து 3.40 மணிக்கு புறப்படும் மறுநாள் அதிகாலை சென்னையை வந்தடையும்.
இந்த நிலையில், செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலை, சரியாக நேற்று இரவு 8:46 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைந்தது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் சோதனை செய்தனர். அப்போது, எஸ்-3 பெட்டியில் விரிசல் இருப்பது தெரியவந்தது.
இதையும் படிங்க; ஸ்டேஷனுக்கு வெளியே உள்ள சிக்னல் அருகே ரயில்கள் அரைமணி நேரம் வரை காத்திருப்பது ஏன்?
இதனையடுத்து, அந்த பெட்டி கழற்றி விடப்பட்டது. அதில் இருந்த பயணிகளுக்கு வேறு பெட்டியில் இடம் வழங்கப்பட்டது. குறித்த நேரத்தில் விரிசல் இருப்பது கண்டறியப்பட்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால், ஒரு மணி நேரம் ரயில் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதால் பயணிகளும், ரெயில்வே நிர்வாகமும் நிம்மதியடைந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Kollam S11p18, Madurai, Train Accident