பொதுவாகவே நம்முடைய முன்னோர்கள் எப்படி வாழ்ந்து இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளவே நாம் மிகவும் ஆர்வமாக இருப்போம். இதுவே 2600ம் ஆண்டுகளுக்கு முன் நம்முடைய சங்க கால மக்கள் எப்படி எல்லாம் வாழ்ந்திருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் கண்டிப்பாக நம்மில் ஒவ்வொருவரும் கீழடி அருங்காட்சியத்திற்கு சென்று வர வேண்டும்.
மதுரையிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில், சிவகங்கை மாவட்டம் பகுதியில் இருக்கக்கூடிய இடம்தான் கீழடி கிராமம். இந்த கிராமத்தில்தான் கீழடி அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பகுதியும் கீழடி அருங்காட்சியகமும் உள்ளது. அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை மக்களுக்கு எடுத்துரைக்கக் கூடிய வகையில் தமிழக அரசு சார்பாக இரண்டு ஏக்கர் பரப்பளவில் செட்டிநாடு ஸ்டைலில் கல் மண்டபங்கள் அமைத்து பிரம்மாண்டமாக கீழடி அருங்காட்சியகம் கட்டப்பட்டது.
இந்த அருங்காட்சியகம் சுமார் ஆறு கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அதில், முதல் கட்டமாக வைகையும் கீழடியும் என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட மாதிரி இங்கு பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றங்கரை நாகரிகம் என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர், காவிரி பூம்பட்டினம், கொடுமணல் போன்ற இடங்களை 20 அடிக்கு வரைபடம் ஒன்று வரையப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வாகன ஓட்டிகளே... ஹெல்மெட் இல்லையா பெட்ரோல் கிடையாது... எதற்காக தெரியுமா?
தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட காவிரி பூம்பட்டினம், முறையூர் கொர்க்கை, மயிலாடுதுறை போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களின் புகைப்படங்களும் வைகை ஆற்றங்கரையில் உள்ள தொல்லியல் இடங்கள் பற்றிய வரைபடமும் தொல்லியல் இடங்களில் கண்டெடுக்கப்பட்ட ஈம தாழிகள், தமிழில் நடுக்கல், பாறை ஓவியம், தமிழில் கல்வெட்டு, உரைக்கிணறு, குத்துகல்போன்றவற்றின் புகைப்படங்களை இங்கு பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இங்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் உள்ள இடங்களையும் பொருட்களையும் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் எல்இடி திரை ஒன்றில் அனிமேஷன் வீடியோ ஒன்றும் ஒளிபரப்பப்படுகின்றது.
செட்டிநாடு கட்டிடக்கலையின் அடைப்படையில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தின் உட்பகுதியை ரசித்துக்கொண்டே சென்றால், ‘கீழடியும் மதுரையும்’ என்ற தலைப்பில் மதுரையின் வைகை பற்றியும் கீழடி அகழாய்வு செய்யப்பட்டபோது, பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட செய்தித்தாளின் புகைப்படத்தையும், கீழடி அகழாய்வு போது ஆச்சரியப்படுத்தக் கூடிய வகையில் இரண்டாம் கட்டம், ஆறாம் கட்டம், ஏழாம் கட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானம் பற்றிய புகைப்படமும் அனிமேஷன் வீடியோவும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நம்மளும் அகழ்வாராய்ச்சி செய்து பார்ப்பதற்கான மாதிரி ஒன்றும் கீழடி அகழ் ஆராய்ச்சியில்பயன்படுத்தப்பட்ட உபகரண பொருட்களையும் இங்கு பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதுபோக இந்த தளத்தில்தான் ‘கீழடி அகழ்வாராய்ச்சி வரலாற்றை’ எடுத்துரைக்க கூடிய வகையில் 20 நிமிடத்திற்கு வீடியோ கவரேஜ் ஒன்று மினி தியேட்டர் செட்டப்பில் ஒளிபரப்பப்படுகின்றது. கோடை விடுமுறை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் நீங்களும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்றால் கண்டிப்பாக இந்த வீடியோ கவரேஜ் பார்த்துவிட்டு செல்லுங்கள். அப்பொழுதுதான் கீழடி அருங்காட்சியகத்தில் உள்ள தொல்லியல் பொருட்களை பற்றி தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai