மதுரை காஜிமார் தெரு 54வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நூர்ஜஹான் மாநகராட்சி கணக்கு குழு தலைவராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் மத்திய மண்டல தலைவர் பாண்டிசெல்வி தலைமையில் நடைபெற்ற, மண்டல கவுன்சிலர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்றார்.
அந்த கூட்டத்தில் வார்டு தேவைகள் குறித்து பேசி அதற்கான நிதியை நூர்ஜஹான் கேட்டுள்ளார். அப்போது, அங்கிருந்த மண்டல தலைவர் பாண்டிசெல்வியின் கணவர் மிசா பாண்டியன், "நன்றி சொல்வதற்காக மட்டுமே கூட்டம் நடத்தப்படுகிறது. இங்கு வேறு பிரச்சனைகளை பேசக்கூடாது" எனக்கூறி, நூர்ஜகானை தகாத வார்த்தைகளாலும், மத ரீதியாகவும் திட்டி கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மிசா பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையர் நரேந்திரன் நாயரிடம் நூர்ஜஹான் புகார் அளித்துள்ளார். உள்ளாட்சி அதிகாரங்களில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் தலையிடக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தும் இந்த சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் இதே போல மாநகராட்சி பணிகளில் தலையிட்டு அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிப்பதாக புகார்கள் எழுந்ததும், மாநகராட்சியில் தொடர்ந்து மேயர் ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Also see... 2024 நாடாளுமன்றத் தேர்தல்... கோவையில் கமல்ஹாசன் - அண்ணாமலை நேரடி போட்டியா?
கட்சியில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் மாநகராட்சி முழுவதும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறி மக்கள் பணிகள் எதையும் நடைபெறவிடாமல் தடுத்து அதிகார வரம்பு மீறலில் தொடர்ந்து ஈடுபடுகிறார் எனவும், இது போன்ற சம்பவங்கள் தொடர்வதற்கு முன்னதாக அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நூர்ஜஹான் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madurai