இந்த ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் செங்கரும்பிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கரும்பிற்கு வழங்கப்பட்ட இந்த புவிசார் குறியீடு நாள் எந்த மாதிரியான நன்மைகள் தரும் என்று விளக்குகிறார் மதுரை அமெரிக்கன் கல்லூரி பொருளாதார துறை பேராசிரியர் முத்துராஜா.
பேராசிரியர் விளக்கம் :
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த ஆண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு வகையான திட்டங்களை விவசாயிகளின் மேம்பாட்டிற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக பார்க்க வேண்டும் என்றால் கரும்பு விவசாயிகளுக்கென, பட்ஜெட்டில் செங்கரும்பிற்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் முக்கியமான ஒன்று.
செங்கரும்பிற்கு புவிசார் குறியீடு என்பது, கரும்பு விவசாயிகளின் மேம்பாட்டு இருக்கு மிகவும் நன்மை தரக்கூடியதாக இருக்கும். குறிப்பாக கரும்பு விவசாயத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். மேலும் கரும்பிற்கு மட்டுமின்றி கரும்பு சார்ந்த பொருட்களுக்கும் வரும் காலத்தில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டால் விவசாயிகளுக்கு நிதி அளவிலும், லாபம் அளவிலும், மனதளவிலும் மேலும் மிகுந்த நன்மை அளிக்கும்.
இதையும் படிங்க : ஓடும் பேருந்தில் இருந்து இறங்கிய சிறுவன் உயிரிழப்பு.. மதுரையில் சோகம்!
புதிய திட்டங்கள் வேண்டும் :
நம் அனைவருக்குமே தெரியும், கரும்பு சார்ந்த பொருட்களுக்கு தண்ணீர் வசதி இல்லையென்றால் கரும்பு வராது. இதனால் நீர் பாசன வசதி மேம்பாட்டிற்கான திட்டங்களும் வகுக்கப்பட வேண்டும். மொத்தத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சிரமங்களை தீர்க்கும் வாயிலாக நிதி ஆதாரங்கள் மட்டுமல்லாமல் ஒரு பொருள் சார்ந்து அங்காடி சார்ந்து எதிர்காலத்திலும் கரும்பு விவசாயத்தை கொண்டு செல்லும் வகையில் இன்னும் புதிய திட்டங்களை அறிவிக்கப்பட வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஒரு அரசாங்க திட்டம் தாண்டி மக்கள் திட்டமாக கரும்பு விவசாயிகளுக்கு இருக்க வேண்டும் கரும்பு பொருட்களை மக்கள் கவனிக்க வேண்டும் ஜீனி மட்டுமல்லாமல் வெல்லம் மட்டுமல்லாமல் மற்ற கரும்பு சார்ந்து பொருட்களை பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.
முக்கிய சிக்கல் :
மேலும் கரும்பு, விவசாயிகளுக்கு முக்கியமான சிக்கல் என்னவென்றால் ஒன்று உரம், மற்றொன்று சரியான நேரத்தில் நிதி இல்லாமல் இருப்பது. அதைவிட முக்கியமானது அதற்கான கருவிகள் இல்லாமல் இருப்பது, இது குறித்து வருகின்ற நாட்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பது விவசாயிகளின் ஆசையாக இருக்கும். ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள செங்கரும்பிற்கு புவிசார் குறியீடு என்பது மிகவும் நன்மை அளிக்கும் வகையில் இருக்கிறது” என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai