முகப்பு /மதுரை /

மதுரையில் மலேசிய ஸ்பெஷல் சிக்கன் முர்தபா சாப்பிடனுமா?

மதுரையில் மலேசிய ஸ்பெஷல் சிக்கன் முர்தபா சாப்பிடனுமா?

X
சிக்கன்

சிக்கன் முர்தபா

Malasian Chicken Murthappa in Madurai | மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் மலேசியாவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான சிக்கன் முர்தபா பிரபலமாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரைக்காரர்கள் என்றாலே உணவை கொண்டாடுபவர்கள் என்று சொல்வது உண்டு. அதற்கு ஏற்றார்போல் தற்போது மதுரையில மலேசியாவின் பாரம்பரியமான உணவுகளில் ஒன்றான சிக்கன் முர்தபா என்ற ஒரு உணவு வகை மதுரை தெப்பக்குளத்துல டெலிஷ் என்ற ஒரு கடையில் விற்கப்பட்டு வருகிறது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள கிரண் என்பவர் ஐடி துறையில் பணிபுரிகிறார். இதுபோக பகுதி நேரமாக உணவகம் தொடங்கவேண்டும் எனவும் எண்ணி வந்துள்ளார்.

அதன்படி மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் டெலிஷ் என்ற கடையை திறந்துள்ளார். இந்த கடையில் வீட்டு முறையில் சமையல் செய்து ரசாயன பொருட்கள் ஏதும் கலக்காமல் இயற்கையான முறையிலேயே தயார் செய்த மலேசியாவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான சிக்கன் முர்தபா என்ற உணவை விற்பனை செய்கிறார்.

சிக்கன் முர்தபா செய்முறை 

வீட்டில் இவர்கள் தயார் செய்யும் மாவை தோசை தவாவில் ஜிலேபி மாதிரி தயார் செய்கின்றனர். அதற்குமேல் சிக்கன் கைமாவை வச்சு, அதுமேல் சிறிதளவு வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, மையோனஸ், சீஸ், ரெட் சில்லி இதையெல்லாம் சிறிதளவு தூவி விட்டு, ஒரு சிறிய ப்ளேட்டில் இறக்கி வைத்துக் கொள்கின்றனர்.

பின்பு இன்னொரு தோசை தாவாவில் மாவை எடுத்து மறுபடியும் ஜிலேபி போன்று சுட்டு அதை சுட்டு வைத்த, இந்த தோசை மேல் வைத்து, மறுபடியும் தோசை தவாவில் வேகவைத்து கொடுத்தால் சிக்கன் முர்த்தபா ரெடியாகி விடுகிறது. சிக்கன் முர்தபா மற்றும் பிரான் முர்த்தபாக்கள் இங்கு விற்கப்படுகிறது. இவை ரூ.100 மற்றும் ரூ.130க்கு விற்கப்படுவதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

First published:

Tags: Food, Lifestyle, Local News, Madurai