Home /madurai /

மதுரைக்கு 25-ம் தேதி வருகை தரும் செஸ் ஒலிம்பியாட் ஜோதி

மதுரைக்கு 25-ம் தேதி வருகை தரும் செஸ் ஒலிம்பியாட் ஜோதி

ஒலிம்பியாட் ஜோதி

ஒலிம்பியாட் ஜோதி

பிரதமர் மோடியால் தொடங்கிவைக்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோடி வரும் 25-ம் தேதி மதுரைக்கு வருகை தரவுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் ஜோதி மதுரைக்கு ஜூலை 25 ஆம் தேதி வருகிறது. இதை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உள்ளிட்ட 3 இடங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் கூறியுள்ளார்.

தமிழகத்தில் முதன்முறையாக சா்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் 187 நாடுகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சா்வதேச சதுரங்க விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா்.

இந்த போட்டிகள் தொடா்பான தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில் விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளி அளவில் நான்கு பிரிவுகளாக சதுரங்க போட்டிகள் ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து ஜூலை 20ம் தேதி வட்டார அளவிலும், 25ம் தேதி மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் 2 இடங்களைப் பெறுவோா், மாநில அளவில் நடைபெறும் 5 நாள் பயிற்சி முகாமில் பங்கேற்பா். இவா்கள் சா்வதேச சதுரங்க ஒலிம்பியாட் வீரா்களுடன் கலந்துரையாடவும், ஒலிம்பியாட் போட்டிகளைப் பாா்வையிடவும் வாய்ப்பு வழங்கப்படும்.

சா்வதேச போட்டி நடைபெறுவதையொட்டி ஒலிம்பியாட் ஜோதியை பொதுமக்கள் பாா்வைக்கு வைக்க மதுரை உள்ளிட்ட 75 நகரங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. ஒலிம்பியாட் ஜோதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். ஒலிம்பியாட் ஜோதி ஜூலை 25 ஆம் தேதி மதுரைக்கு வரவுள்ளது. மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், மதுரை தெப்பக்குளம், மாவட்ட விளையாட்டு மைதானம் ஆகிய 3 இடங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும்.

மதுரையில் சதுரங்கப் போட்டி தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்திடும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி மாவட்ட நிா்வாகம் சாா்பில் தயாரிக்கப்பட்டுள்ள "நம்ம செஸ்-மதுரை மாஸ்" என்ற குறும்பாடல் மற்றும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி