Home /madurai /

தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! இத்தனை ரயில்கள் ரத்தா?

தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! இத்தனை ரயில்கள் ரத்தா?

ரயில் போக்குவரத்து மாற்றம்

ரயில் போக்குவரத்து மாற்றம்

Madurai: மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால், செப்டம்பர் 30ஆம் தேதி வரை தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் ரயில் போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, திண்டுக்கல்-அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கிடையே நடக்கும் பராமரிப்பு பணிக்காக, வருகிற 16ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16322) செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் மட்டும் சுமார் 90 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும்.

மேற்கண்ட நாட்களில் சென்னையில் இருந்து மதுரை வழியாக குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16127) மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சுமார் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும், வெள்ளிக் கிழமைகளில் சுமார் 95 நிமிடங்கள் காலதாமதமாகவும் இயக்கப்படும். இதனால் மேற்கண்ட நாட்களில் மணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரயிலுக்கு (வ.எண்.06672) இந்த ரயிலின் இணைப்பு ரயில் சேவை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ராஜபாளையம் - சங்கரன்கோவில் பிரிவில் நடக்கும் பணிக்காக, மதுரையில் இருந்து நண்பகல் 11.30 மணிக்கு செங்கோட்டை புறப்படும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரயில் மற்றும் செங்கோட்டையில் இருந்து நண்பகல் 11.50 மணிக்கு மதுரை புறப்படும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரயில்  வருகிற 16ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: மதுரையில் 23-ம் தேதி தொடங்குகிறது புத்தக கண்காட்சி  - மாணவர்கள் திறமையை மேம்படுத்த பயிலரங்கங்கம்

தென்காசி - செங்கோட்டை இடையேயான பராமரிப்பு பணிக்காக, வருகிற 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மதுரையிலிருந்து மாலை 5.15 மணிக்கு செங்கோட்டை புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரயில் மற்றும் நெல்லையில் இருந்து மாலை 6.15 மணிக்கு செங்கோட்டை புறப்பட்டு செல்லும் ரயில் ஆகியன தென்காசி வரை மட்டும் இயக்கப்படும்.

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் நடக்கும் பராமரிப்பு பணிக்காக, பாலக்காடு - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16731) மற்றும் திருச்செந்தூர்- பாலக்காடு ரயில் (வ.எண்.16732) ஆகியன சாத்தூர் - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

குமாரபுரம் ரயில் நிலைய பராமரிப்பு பணிக்காக, வருகிற 28, 29ஆகிய தேதிகளில் மேற்கண்ட ரயில்கள் கோவில்பட்டி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மேலும் இந்த ரயில்கள் வருகிற 30ஆம் தேதி மதுரை - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இதில், திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் ரயில் (வ.எண். 16732) மதுரையிலிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Published by:Arunkumar A
First published:

Tags: Madurai, Southern railway

அடுத்த செய்தி