முகப்பு /மதுரை /

பயணிகள் கவனத்திற்கு.. மதுரை புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம்..

பயணிகள் கவனத்திற்கு.. மதுரை புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம்..

மாதிரி படம்

மாதிரி படம்

Madurai Punalur Express | மதுரை புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்டம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட செங்கனூர் - மாவேலிக்கரை, கருங்காப்பள்ளி - சாஸ்தான் கோட்டை, கடக்காவூர் - வர்க்கலா மற்றும் நாகர்கோவில் பராமரிப்பு பணிமனை ஆகிய இடங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் இந்த பாதையில் இயக்கப்படும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, புனலூர் மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் வரும் ஜுன் 21ம் தேதி 23, 24 மற்றும் 26ம் தேதிகளில் நாகர்கோவில் ஜங்ஷன் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும். அதாவது இந்த ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திற்கு இரவு 10:40 மணிக்கு வந்தடையும்.

இதையும் படிங்க : சோலி முடிஞ்சிச்சி..! அரிசிக்கொம்பனை அழைத்து செல்லும்போது அவிழ்ந்த கயிறு..!

மறு மார்க்கத்தில் மதுரை புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் ஜுன் 21ம் தேதி 23, 24 மற்றும் 26ம் தேதிகளில் நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு பதிலாக நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திற்கு அதிகாலை 4 35 மணிக்கு சென்றடையும். மேலும் அங்கு இந்த ரயில்களுக்கு மேற்கண்ட நாட்களுக்கு மட்டும் தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதேபோல் ராமேஸ்வரத்திலிருந்து மதுரை வழியாக கன்னியாகுமரி வரை இயக்கப்படும் வாரம் 3 நாட்கள் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 24ம் தேதி மற்றும் 26ம் தேதிகளில் ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 20 நிமிடம் தாமதமாக புறப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Madurai, Southern railway