முகப்பு /மதுரை /

மத்திய, மாநில அரசு திட்டம்.. மதுரையில் கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்பு!

மத்திய, மாநில அரசு திட்டம்.. மதுரையில் கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்பு!

X
மதுரையில்

மதுரையில் கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்பு

Madurai | எந்தெந்த திட்டங்கள் கிராமங்களுக்கு வகுக்கப்பட்டுள்ளது, அந்த திட்டங்களை தங்களது கிராமங்களுக்கு எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து தெளிவான முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை அவுட் போஸ்ட் பக்கத்தில் இருக்கக்கூடிய கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் மத்திய மாநில அரசு திட்டங்களை எடுத்துரைக்கக் கூடிய வகையில் கிராம ஊராட்சி பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

70க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கு கிராமங்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் என்னென்ன வகுக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைக்கக்கூடிய வகையில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றது.

இதுகுறித்து பேசிய மாநில ஊரக வளர்ச்சித் துறை பயிற்சியாளர் மீனம்பாள், நான் 13 வருடங்களாக இந்த பணியில் இருந்து வருகின்றேன். பலதரப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசுகள் கொடுக்கக்கூடிய திட்டங்களை அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு பயிற்சிகளை கொடுத்து வருகின்றேன்.

அந்த வகையில கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கு மூன்று நாள் பயிற்சி நடைபெற்று வருகின்றது. இந்த பயிற்சியில் 2023 மற்றும் 2024 அரசு திட்டங்களை பற்றி பயிற்சி அளித்து இருக்கின்றோம்.

இந்த சுற்றில் 18 பஞ்சாயத்தில் இருந்து 72 பஞ்சாயத்து உறுப்பினர்கள் வந்திருக்கின்றார்கள். இந்த 72 பேருமே அந்தந்த பஞ்சாயத்து கூட்ட அமைப்புகளோடும் கிராம ஊராட்சி பஞ்சாயத்து தலைவர் செயலாளருடன் சேர்ந்து பயிற்சியில் சொல்லப்பட்ட இலக்குகளை முடிக்கும் வகையில் பயிற்சி நடத்தி வருகின்றோம்.

கிராம வளர்ச்சி திட்டத்தில் நிலைத்து நீடித்த இலக்கு அதாவது வறுமை நலவாழ்வு கிராம சுகாதார முறை இந்த அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றது. எந்தெந்த திட்டங்கள் கிராமங்களுக்கு வகுக்கப்பட்டுள்ளது, அந்த திட்டங்களை தங்களது கிராமங்களுக்கு எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து தெளிவான முறையில் நாங்கள் பயிற்சி அளித்து வருகின்றோம் இதனை ஆர்வமாக கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களும் கேட்டு வருகின்றார்கள் என்றார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Madurai