Home /madurai /

மதுரையில் காந்தியின் ஆடை புரட்சி.. காந்தி மியூசியத்தில் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சி..

மதுரையில் காந்தியின் ஆடை புரட்சி.. காந்தி மியூசியத்தில் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சி..

மதுரையில்

மதுரையில் காந்தி அரை ஆடைக்கு மாறியதன் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி..

Madurai Mahatma Gandhi Cloth Revolution | மகாத்மா காந்தியடிகள் 1921இல் மதுரைக்கு வந்திருக்கும் பொழுது தனது மேலாடை துறந்து சாதாரண ஆடைக்கு மாறிய ஆடை புரட்சி நிகழ்வு மதுரையில் நடந்து 100 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai
தேசத் தந்தை மகாத்மா காந்தி என்றதும், நம் நினைவில் நிற்பது கை தடியுடன், எளிமையான உடையில் வலம் வந்த அவரின் உருவம்தான். அவரது இடைக்கால வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த  தோற்றத்தின் பின் ஒரு வரலாறே அடங்கியுள்ளது. அது தமிழரோடு தொடர்புடையது என்பது நமக்கு கிடைக்கும் பெருமை.

காந்தியடிகள்  கோட் சூட்டிலிருந்து அரையாடைக்கு மாறிய நூற்றாண்டு நாள் வருகின்ற செப்டம்பர் 22 அன்று கொண்டாடப்பட உள்ளது.

காந்தியின் வாழ்க்கையில் தமிழருக்கு என, ஒரு தனி இடம் உண்டு. மேல்நாட்டில் சட்டப்படிப்பு பயின்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1888ஆம் ஆண்டுவாக்கில் கோட்-சூட் என வெளிநாட்டினரின் உடைகளை அணியும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அதற்கு 33 ஆண்டுகளுக்கு பிறகு 1921ஆம் ஆண்டு தமிழகத்தில் மதுரைக்கு  வந்த அவர் மேல்சட்டையை துறந்து இடுப்பில் வேட்டி, தோளில் துண்டு என தனது ஆடை பழக்கத்தை மாற்றிக்கொண்டார்.

இதையும் படிங்க:  மதுரையில் மலிவு விலையில் புத்தகங்கள் வாங்கனுமா?

1921-ல் மதுரைக்கு ரயிலில் வந்தபோது சோழவந்தான் அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு விவசாயியை ஜன்னல் வழியாகப் பார்த்தார் காந்தி. நாட்டின் சாதாரண மக்கள் முழு உடை அணிய வசதியில்லாதபோது, தான் மட்டும் எப்படி முழு உடை அணியலாம் என்ற கேள்வி காந்தியின் மனதில் எழுந்தது.

அதன் காரணமாக இனி சாதாரண மக்களைப் போலவே உடை அணிவது என்ற முடிவை அவர்  எடுத்தார். மதுரையில் தங்கியிருந்த காலத்திலேயே இந்த முடிவை நடைமுறைப்படுத்தவும் செய்தார். அப்படி மாறிய அவருடைய உடை அணியும் வழக்கம் அவருடைய வாழ்நாளின் இறுதிநாள் வரை தொடர்ந்தது. இது மகாத்மா காந்தி தமிழ்நாட்டில் இருந்து பெற்றுக் கொண்ட பெரிய பாடம்.

இதையும் படிங்க:  பாண்டிய மன்னனை மன்னிப்பு கேட்க வைத்த மாணிக்கவாசகர்- திருவாதவூர் கோவில் வரலாறு தெரியுமா?

இப்படியாக, மகாத்மா காந்தி தமிழகத்தில் இருந்து கற்றதும், பெற்றதும் ஏராளம். தேசத்தந்தை மகாத்மா காந்தி தனது அரையாடை  புரட்சியைத் தொடங்கிய நிகழ்வானது தற்போது 100 ஆண்டுகளை கடந்து 101ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே இதன் நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் மதுரை காந்தி அருங்காட்சியகம் சார்பிலும் பிற சமூக நல அமைப்புகள் சார்பிலும் நடை பேரணி உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Published by:Arun
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி