முகப்பு /மதுரை /

மதுரைல இப்படி ஒரு கடையா? காஸ்ட் அயன் மூலம் செய்யப்பட்ட விதவிதமான சமையல் பாத்திரங்கள்

மதுரைல இப்படி ஒரு கடையா? காஸ்ட் அயன் மூலம் செய்யப்பட்ட விதவிதமான சமையல் பாத்திரங்கள்

X
காஸ்ட்

காஸ்ட் அயன் தயாரிப்புகள்

Madurai Shopping | மதுரை இமாம் ஸ்டோரில் காஸ்ட் அயன் மூலம் தயாரிக்கப்பட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் கிடைக்கின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

சமையலுக்கு நாம பொதுவாகவே எவர் சில்வர், நான்ஸ்டிக், அலுமினியம் போன்ற பொருட்களை தான் அதிகமாக பயன்படுத்திக் கொண்டிருப்போம். ஆனால் அந்த காலத்தில் முழுக்க முழுக்க மண்பாண்டம், இரும்பு, பித்தளை போன்ற பாரம்பரிய பொருட்களை வைத்து தான் பயன்படுத்தி இருந்திருக்கிறார்கள்.

இரும்பு போன்ற பொருட்களில் உணவு சமைத்து சாப்பிட்டால் நாம் சாப்பிடும் உணவில் இரும்பு சத்தும் சேர்க்கப்படுமாம். இது போன்ற பாரம்பரியமான பொருட்களை வைத்து சமைப்பதன் மூலம் நமது உடம்பில் சேர்க்கப்படும் உணவுகள் நச்சுத்தன்மை அற்றதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

அப்படி பாரம்பரியமான பொருட்களாலான இரும்பு மற்றும் காஸ்ட் அயன் போன்ற பொருட்கள் நம்ம மதுரையில இமாம் ஸ்டோரில் ஹேண்ட் மேட் மூலமாக தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

காஸ்ட் அயன் தயாரிப்புகள்

இக்கடை மதுரை ஏவி பாலம் இறங்கும் இடமாகவும் நெல்பேட்டை போற வழியிலும் இருக்கிறது. இக்கடையில் விதவிதமான முறையில் தயாரிக்கப்பட்ட இரும்பு கல் மற்றும் காஸ்ட் அயன் மூலமாக பல்வேறு சமையல் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றது.

சமையலுக்கு தேவைப்படும் அனைத்து வகையான சமையல் பொருட்களான வெரைட்டியான தோசை தவா, இரும்பு தோசை தவா, காஸ்ட் அயன் தோசை தவா என விதவிதமான தோசை தவாக்கள் இருப்பதாகவும் 5 கிலோ எடை கொண்ட காஸ்ட் அயன் மூலம் செய்யப்பட்ட பிரியாணி சட்டியும், காஸ்ட் அயன் மூலம் செய்யப்பட்ட ஆப்ப சட்டியும் பனியார சட்டியும், வீடுகளிலும் எளிதாக செய்யக்கூடிய கிரில் சிக்கன் பேணும், கல்லினால் செய்யப்பட்ட கல் சட்டியும், இரும்பின் மூலமாகவே செய்யப்பட்ட மினியேச்சர் பொருட்களான குழி கரண்டி, தோசை தவா, பனியார சட்டி, அடுப்பு என விதவிதமான பொருட்களும் இங்கு விற்கப்படுகின்றது.

புதுப்பொலிவுக்கு தயாராகும் மதுரை திருமலை நாயக்கர் மஹால்.. மன்னர் காலத்து பாணியில் புதுப்பிப்பு பணிகள்..

ஒவ்வொரு பொருளின் தரத்திற்கு ஏற்பவும் எடைக்கேற்பவும் இங்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகின்றது.

First published:

Tags: Local News, Madurai