முகப்பு /மதுரை /

கோடை சீசன் : தூத்துக்குடியில் இருந்து மதுரை வழியாக ஊட்டிக்கு பஸ் சேவை தொடக்கம்!

கோடை சீசன் : தூத்துக்குடியில் இருந்து மதுரை வழியாக ஊட்டிக்கு பஸ் சேவை தொடக்கம்!

மதுரை வழியாக ஊட்டிக்கு பஸ் சேவை

மதுரை வழியாக ஊட்டிக்கு பஸ் சேவை

Madurai | ஊட்டியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையம் வந்தடைகிறது. 

  • Last Updated :
  • Madurai, India

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் கோடை விடுமுறையை முன்னிட்டு தூத்துக்குடியில் இருந்து மதுரை வழியாக ஊட்டிக்கு தினசரி பஸ் சேவை தொடங்கியுள்ளது. அதன்படி, இந்த பஸ் தூத்துக் குடியில் இருந்து தினமும் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்துக்கு நள்ளிரவு 11.59 மணிக்கு வந்தடைகிறது. அங்கிருந்து புறப்பட்டு கோவைக்கு அதிகாலை 4.30 மணிக்கும், மேட்டுப்பாளையத்திற்கு அதிகாலை 6.30 மணிக்கும், குன்னூர் காலை 7.30 மணிக்கும், சென்றடைகிறது. ஊட்டிக்கு காலை 8.30 மணிக்கும் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் ஊட்டியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடைகிறது. தூத்துக்குடியில் இருந்து ஊட்டி செல்ல டிக்கெட் கட்டணமாக ரூ.480 வசூலிக்கப்படுகிறது.

மேலும் மதுரையில் இருந்து ஊட்டி செல்ல ரூ.325 டிக்கெட் வசூலிக்கப்படுகிறது. சிறுவர்களுக்கு ரூ.240 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மதுரையில் இருந்து ஊட்டி செல்ல ரூ.325 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் சிறுவர்களுக்கு டிக்கெட் ரூ.165 வசூலிக்கப்படுகிறது. இந்த பஸ் மதுரையில் இருந்து தாராபுரம், கோவை, மேட்டுப்பாபட்டு பாளையம், குன்னூர் வழியாக இயக்கப்படுகிறது.

மேலும், மதுரை, ஆரப்பாளையம், கோவை, மேட்டுபாளையம், குன்னூர், ஆகிய ஊர்களில் மட்டும் நின்று செல்லும். இந்த பஸ்ஸில் பயணம் செய்வதற்கான டிக்கெட்களைபயணிகள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

First published:

Tags: Local News, Madurai, Tuticorin