Home /madurai /

மதுரையில் 23-ம் தேதி தொடங்குகிறது புத்தக கண்காட்சி  - மாணவர்கள் திறமையை மேம்படுத்த பயிலரங்கங்கம்

மதுரையில் 23-ம் தேதி தொடங்குகிறது புத்தக கண்காட்சி  - மாணவர்கள் திறமையை மேம்படுத்த பயிலரங்கங்கம்

மதுரை புத்தகத் திருவிழா

மதுரை புத்தகத் திருவிழா

மதுரை தமுக்கம் மாநாட்டு மைதானத்தில் வருகிற 23ஆம் தேதி முதல் புத்தக கண்காட்சி தொடங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
புத்தக கண்காட்சி தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மதுரையில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கத்தின் சார்பாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்து செல்ல உத்தரவிட்டதன் பேரில், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருகின்ற 23ஆம் தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 3ஆம் தேதி வரை அனைத்து நாட்களிலும் மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள \"மதுரை மாநாட்டு மையத்தில்\" மாபெரும் புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது.

இந்த புத்தக கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இதில் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பாக ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட புத்தக அங்காடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் சிறப்பு அம்சமாக குழந்தைகளுக்கான கதை சொல்லல், பயிலரங்கம் போன்ற நிகழ்வுகளைக் கொண்ட சிறார் அரங்கம் அமைக்கப்படுகிறது.

மேலும், கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் விருப்பமுள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளும் கவிதை, கட்டுரை, பேச்சு, புனைவு, நாடகம், சினிமா, தொல்லியல் மற்றும் நுண்கலை தொடர்பான பயிலரங்கங்கள் சிறந்த வல்லுநர்களைக்கொண்டு நடத்தப்பட உள்ளது.

அது தவிர தினந்தோறும் மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நட்சத்திர பேச்சாளர்களின் உரை வீச்சுகள் மற்றும் பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன. எனவே, வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றும் பொருட்டு இந்த புத்தக கண்காட்சியில் சிறுவர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயன் அடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி