முகப்பு /மதுரை /

மதுரையில் புத்தக கண்காட்சி.. அடுக்கடுக்கான ஆஃபர்! மிஸ் பண்ணாம போங்க!

மதுரையில் புத்தக கண்காட்சி.. அடுக்கடுக்கான ஆஃபர்! மிஸ் பண்ணாம போங்க!

X
மதுரை

மதுரை புத்தக கண்காட்சி

Madurai District | மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் அன்லிமிடெட் புத்தகம் கண்காட்சி அடிப்படையில் பிக்ஸன் நான் பிக்சன் போன்ற புத்தகம் தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை கோர்ட் ரோடு அருகே உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் அன்லிமிடெட் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.

ராஜா முத்தையா மன்றம் சார்பாக ஒவ்வொரு மாதமும் கண்காட்சி நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் அன்லிமிடெட் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகின்றது.

இந்த புத்தக கண்காட்சி குழந்தைகளுக்கு என வேர்ட்ஸ் பஸ்ஸில்ஸ் போன்ற புத்தகங்களும் க்ரைம், கிளாசிக், அடல்ட், போன்ற பிக்சன் புத்தகங்களும் ஸ்போர்ட்ஸ் ஹெல்த்தி பிட்னஸ் ட்ராவல் போன்ற நான் ஃபிக்சன் புத்தகங்களும் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் குறைந்த விலையிலும் தள்ளுபடி விலைகளும் விற்கப்பட்டு வருகின்றது.

மேலும் புத்தக பிரியர்கள் விரும்பும் வகையில் மருத்துவ புத்தகங்கள், காமிக்ஸ் போன்ற அனைத்து வகையான புத்தகங்களும்வாசகர்களுக்கு ஏற்றபடியாக விற்கப்படுகின்றன. புத்தகப் பிரியர்கள் விரும்பும் வகையில் அனைத்து வகையான புத்தகம் குறைந்த விலையில் இங்கே விற்கப்படுவதால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இங்கே, தங்களுக்கு தேவையான புத்தகங்கள் ஓர் அட்டை பெய்டியில் அடுக்கி, அதை அப்படியே தள்ளுபடி விலையில் வாங்கிச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி வாங்குவது ஒவ்வொரு புத்தகத்திற்கும் தனி விலை என்று அல்லாமல், ஓர் அட்டை பெட்டி புத்தகம் இவ்வளவு விலை என்று விற்பனை செய்யப்படுகிறது.

குறைந்த விலையில் அதிக புத்தகங்களை வாங்க விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த புத்தக கண்காட்சிக்கு நுழைவுக்கட்டணம் எதுவும் இல்லை. இங்கு புத்தகங்களை வாங்க இன்றே கடைசி நாள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

First published:

Tags: Book Fair, Local News, Madurai