மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள இந்தியன் பேங்க எதிர்புறத்தில் பிளாட்பார்மில் அமைந்துள்ள கடை தான் ‘தாஹாபிரியாணி’ கடை. இந்த கடையில விதவிதமான அசைவ உணவுகள் கிடைக்கிறது. இந்த உணவகத்தில் இதுதான் ஃபேமஸ் என்று சொல்ல முடியாது ஏனென்றால் அந்த அளவுக்கு சிக்கன், மட்டன், குடல், போன்லெஸ் என பல வகைகளில் பிரியாணியும், பலவித ஃபிரைட்ரைஸ்களும்,நூடுல்ஸ் இடியாப்பம் சப்பாத்தி பெப்பர் சிக்கன், சிக்கன் கிரேவி, சிக்கன் சுக்கா, மட்டன் கிரேவி, முட்டை பொரியல், சிக்கன் 65 என விதவிதமான உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றது.
இங்கு விற்கப்படும் சிக்கன்களில் ரசாயன பொருட்களான கலர் பவுடர்கள் ஏதும் கலக்காமல் இயற்கையான சிக்கன் கலரிலும், சப்பாத்திகளில் எண்ணெய் பயன்படுத்தாமல் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
சிக்கன் பிரியாணி 90 ரூபாய்க்கும், முட்டை பிரியாணி 80 ரூபாய்க்கும், பிளைன் பிரியாணி 60 ரூபாய்க்கும், சிக்கன் நூடுல்ஸ் 80 ரூபாய்க்கும், 3 செட் சப்பாத்தி மற்றும் கிரேவியுடன் சேர்ந்து ரூ. 40க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதால், வெளியூர்களில் இருந்து இப்பகுதிகளில் தங்கிவேலை பார்க்கும், படித்து வரும்மாணவர்கள், இளைஞர்கள் இக்கடைக்கு படையெடுக்கின்றார்கள்.
இந்த கடைக்கு வாடிக்கையாக சாப்பிட வரும் இளைஞர்கள், நாங்க 3 வேளையும் இந்தக்கடைக்கு தான் சாப்பிட வரோம்.ஏனென்றால் இக்கடையில் பிரியாணி சப்பாத்தி என எது சாப்பிட்டாலும் 90 ரூபாய்க்குள் முடிந்து விடும். இதுபோக பிரியாணி, சப்பாத்தி மற்றும் கிரேவி அயிட்டங்கள், சிக்கன் நூடுல்ஸ் என எல்லாமே சுவையாக இருப்பதாலும் நாங்கள் அடிக்கடி இக்கடைக்கு வந்து செல்கிறோம் என தெரிவித்தனர்.
மதுரையில் சிறந்த சாலையோர உணவுக்கடைகளை தேடிக்கொண்டிருப்போருக்கு இந்த கடை பெஸ்டாக இருக்கும் என கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food, Hotel, Local News, Madurai