ஹோம் /மதுரை /

“வாடிவாசலில் இறக்கி விட்டால் சேட்டைக்காரன்" ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் மதுரை அனுப்பானடி +2 மாணவி திவ்யதர்ஷினி!

“வாடிவாசலில் இறக்கி விட்டால் சேட்டைக்காரன்" ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் மதுரை அனுப்பானடி +2 மாணவி திவ்யதர்ஷினி!

X
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் மாணவி

Madurai Jallikattu Bulls | மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவியான திவ்யதர்ஷினி; மாணிக்கம், மிலிட்டரி என இரண்டு காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக தயார்படுத்தி வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

ஜல்லிக்கட்டுக்கு பெயர்போனது மதுரை என்று சொல்லுவாங்க. அப்படிப்பட்ட மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவதற்கு ஜல்லிக்கட்டு வீரர்கள் ஒரு பக்கம் இருக்க ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதற்கு என வீரதமிழச்சிகளின் கூட்டமும் உள்ளது. அப்படிப்பட்ட வீர தமிழச்சிகளில் ஒருவர் தான் மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த திவ்யதர்ஷினி.

திவ்யதர்ஷினியின் குடும்பங்கள் தலைமுறை தலைமுறையினராக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியான திவ்யதர்ஷினிக்கும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. சிறு வயதில் இருந்தே தனது தம்பிகளான மாணிக்கம் மற்றும் மிலிட்டரி என்ற இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்.

இந்தக் காளைகள் மிகவும் அன்பானது ஆனால் பாடி வாசலில் இறக்கி விட்டால் மட்டும் சேட்டைக்காரர்கள்.இவர்கள் இதுவரை தோற்றுதே இல்லை என்றும் தனக்கு பரிசுகளை அள்ளிக் கொடுத்து இருக்கிறார்கள் என்றார் கடந்த ஆண்டு தான் முதல் முதலாக வாடிவாசலில் ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்ததாகவும் இந்த ஆண்டு தனது காளைகளை தயார் படுத்திக் கொண்டிருக்கும் திவ்யதர்ஷினி பற்றி இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்...

First published:

Tags: Jallikattu, Local News, Madurai