தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளிக்கு அடுத்து 4ஆவது பெரிய விமான நிலையமாகத் திகழ்கிறது மதுரை விமான நிலையம். இது மதுரை மற்றும் தென் தமிழகத்திற்கான முக்கிய விமான நிலையமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், மற்றும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
அதன்படி, மதுரை விமானநிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலைய உள்பகுதிகளில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விமானநிலையம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதுபோல மதுரை விமான நிலையத்தை சுற்றிலும் 24 மணிநேரமும் ரோந்து பணி மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும், மோப்பநாய் பிரிவினரும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விமான பயணிகள் அனைவரும் கடும் சோதனைக்கு பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
விமான நிலையத்தின் வெளிப்பகுதிகளான பெருங்குடி, சின்ன உடைப்பு உள்ளிட்ட பகுதிகளில் மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்தில், எந்த வித அசம்பாவிதமும் நடக்காமல இருக்க இரவு பகலாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்நிலையில், மதுரை விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 31ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Must Read : குற்றால மெயின் அருவிக்கு ஒரு ஜாலி பைக் ரைட் போலாம் வாங்க..
எனவே, விமான நிலையத்திற்கு சென்டாப் செய்ய வருபவர்கள், விமான நிலையத்திற்கு வெளியில் இருந்துதான் டாட்டா காட்ட வேண்டி இருக்கும். அதேபோல விமானத்தில் வருபவர்களை அழைத்துச் செல்ல விமான நிலையத்திற்கு வெளியில் காத்திருந்து அழைத்துச் செல்ல வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madhurai Airport, Madurai, Republic day