மதுரை செல்லூர் ரோடு பகுதியில் பார்ப்பதற்கு கண் கவரும் வகையில் மூங்கில்களினால் செய்யப்பட்ட ஊஞ்சல்கள், விதவிதமான பூ கூடைகள், குருவிக் கூடுகள், அன்ன கூடைகள், மூங்கில் ஸ்டாண்ட் என மூங்கில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றது.
இங்கு உள்ள கைவினைப் பொருட்கள், விதவிதமான பூக்கூடை அசாமில் இருந்தும் மூங்கில் ஊஞ்சல்கள் செங்கோட்டையிலிருந்தும் பனை ஓலைகள், விசிறி போன்றவை இராமநாதபுரம் போன்ற இடங்களில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றது.
மற்றபடி வியாபாரிகளே செய்து விற்கக்கூடியபொருட்கள் அன்னக்கூடை, பூக்கூடை விளக்கமார்கள் தான்.
இது குறித்து பேசிய வியாபாரிகள், ‘இத்தொழில் எங்கள் குலத்தொழில் ஆகும். ஆனால இதில் கிடைக்கும் லாபம் குறைவு என்பதால் 300 குடும்பங்கள் இருந்த நிலையில் தற்பொழுது 100 குடும்பங்கள் மட்டும் தான் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம். மற்றவர்கள் பெயிண்ட் வேலை, வீட்டு வேலை, கொத்தனார் வேலை என்று அதில் அதிக லாபம் கிடைப்பதால் அங்கு சென்று விட்டார்கள்.
300 ரூபாய் ஒரு கூடையின் விலை என்றால் அதில் 150 ரூபாய் கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூங்கிலுக்குச்சென்று விடும். லாபம் என்னவோ 150 தான் ஒரு நாட்களில் விற்கப்படும் பொருட்களை பொறுத்து உள்ளது. சுப முகூர்த்த நாட்களில் மட்டும் சற்று லாபம் இருக்கும் என்கிறார்.
செய்தியாளர்: யுவதிகா, மதுரை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai