முகப்பு /மதுரை /

மதுரை தமுக்கம் மைதானத்தில் உலக தலைக்காயம் விழிப்புணர்வு நாள் பேரணி..

மதுரை தமுக்கம் மைதானத்தில் உலக தலைக்காயம் விழிப்புணர்வு நாள் பேரணி..

X
மதுரை

மதுரை தமுக்கம் மைதானம்

Madurai News : மதுரை தமுக்கம் மைதானம் தமிழன்னை சிலை அருகே உலக தலை காயம் விழிப்புணர்வு நாளை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை தமுக்கம் மைதானத்தில் உலக தலைக்காயம் விழிப்புணர்வு நாளை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர் போக்குவரத்துக் காவல் துணை ஆணையர் ஆறுமுகசாமி, மதுரை மாநகராட்சி காவல் ஆணையாளர் சிம்ரன் ஜீத், தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் இளைஞர்கள் கட்டாயம் கலைக்கவசம் அணிய வேண்டும் என்று பேசி உரையாடினர். மேலும் மதுரை அமெரிக்கன் கல்லூரி சேது இன்ஜினியரிங் கல்லூரி மாணவ, மாணவிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பேரணியை மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் கொடி அசைத்து வைத்து தொடங்கிவைத்தார்.

இதையும் படிங்க : கானா பாடல்கள் பாடி கோவை குணாவின் நண்பர்கள் இறுதி அஞ்சலி... 

கல்லூரி மாணவ, மாணவிகள்,‘படியில் பயணம் நொடியில் மரணம்’, ‘மது அருந்தி வாகனம் ஓட்டாதீர்கள்’, ‘ஹெல்மெட் அணியுங்கள்’ என்பன உள்ளிட்டபல்வேறு வகையான பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு தமுக்கம் மைதானத்தில் இருந்து திருவள்ளுவர் சிலை வரை பேரணியாக சென்றனர்.

First published:

Tags: Local News, Madurai