ஹோம் /மதுரை /

எங்கு பார்த்தாலும் கரடு முரடான பள்ளம்.. ஆழமான குழிகள்.. மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு சாலையின் அவலம்..

எங்கு பார்த்தாலும் கரடு முரடான பள்ளம்.. ஆழமான குழிகள்.. மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு சாலையின் அவலம்..

X
மதுரை

மதுரை அவனியாபுரம் சாலை

Madurai Villapuram Housing Board Road | மதுரையில் உள்ள வில்லாபுரம், அவனியாபுரம், ஜீவா நகர், ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் இந்த பாதையில் தார் சாலை அமைக்கப்பட்டு அதனை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

எங்கு பார்த்தாலும் கரடு முரடான பள்ளம்.. ஆழமான குழிகள்.. குளம் போல தேங்கி நிற்கும் மழை நீர், வழுக்கும் சேர், சகதி....

மதுரை  ஜீவாநகர் பகுதியில் இருந்து அவனியாபுரம் நோக்கி செல்வதற்கு பயன்படும் முக்கிய பாதை தான் நாம் பார்க்க கூடிய இந்த வில்லாபுரம் ஹவுசிங் போர்டு சாலை. 10 வருடங்களுக்கும் மேலாக இந்த சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் குப்பைகள் கொட்டப்பட்டு, இது சாலை தானா  என கேள்வி எழும் அளவிற்கு மோசமாக காட்சியளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாக மதுரையில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் சேரும் சகதியுமாக இருக்கும் இந்த சாலையில், காலை பள்ளிக்கு குழந்தைகள் மற்றும் மாணவர்களை இருசக்கர வாகனத்தில் பெற்றோர்கள் அழைத்து செல்லும் பொழுது பலரும் சாலையின் மோசமான தன்மை காரணமாக கீழே விழுந்து சிரமத்திற்கு ஆளாகின்றனர்,

மேலும் ஒரு மாதத்திற்கு முன்பு குடிநீர் குழாய் பதிப்பு பணிகளுக்காக இந்த சாலையில் குழிகள் தோண்டப்பட்டு அவை நடைபெற்று முடிந்த பின்பும் அந்த குழிகள் மாநகராட்சி மூலம் முறையாக மூடப்பட்டு சாலை சீர் செய்யப்படவில்லை. இதன் காரணமாக இந்த சாலை தற்போது மேலும் மோசமாக காட்சியளிக்கிறது.

மேலும் படிக்க:  சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு இப்படியொரு பெயரா.!

மதுரையில் உள்ள வில்லாபுரம், அவனியாபுரம், ஜீவா நகர், ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் இந்த பாதையில் தார் சாலை அமைக்கப்பட்டு அதனை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே இப்பகுதி வாசிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Madurai