ஹோம் /மதுரை /

குப்பை கிடங்காக மாறி வருகிறதா மதுரை ஜீவாநகர்?

குப்பை கிடங்காக மாறி வருகிறதா மதுரை ஜீவாநகர்?

மதுரை ஜீவாநகர்

மதுரை ஜீவாநகர்

Madurai Jeeva Nagar | மதுரை ஜீவநகரை அடுத்துள்ள திருமலை தெரு சாலை குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை கிடங்கு போல் காட்சியளிக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதல் இன்று வரை தனது கலாச்சாரத்தையும், சிறப்புகளையும் பேணிக்காக்கும் உலகின் ஒரு சில நகரங்களின் வரிசையில் மதுரையும் ஒன்று.

அப்படி பட்ட மதுரை மாநகரத்தை மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி யாக அறிவித்து அதற்கான பணிகள் படிப்படியாக தற்போது நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளன.

என்ன தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரைக்கு பல நவீன வசதிகள் கிடைத்தாலும் இன்றும் மதுரையில் வாழும் பலருக்கு அடிப்படை சுகாதாரம் கூட கிடைக்காத நிலை தொடரத்தான் செய்கிறது.

மதுரை மேற்கு பகுதி 43வது வார்டில் உள்ள தெரு தான் திருமலை தெரு. மதுரை ஜீவாநகர் பகுதியையும் அவனியாபுரம் செல்வதற்கான சாலையை இணைக்கும் எம்.எம்.சி காலனி பகுதியையும் இணைக்கும் முக்கிய சாலையாக இந்த திருமலை தெரு சாலை உள்ளது. ஆனால் இது சாலை தானா என கேள்வி எழும் அளவிற்கு இந்த சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை கிடங்கு போல் காட்சியளிக்கிறது.

திருமலை தெரு சாலை

இப்பகுதியில் பல இரும்பு பட்டறைகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், கண்ணாடி தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில் அவர்களால் இங்கு குப்பைகள் கொட்டபடுகிறதா என்ற சந்தேகம் ஒரு பக்கம் இருக்க.. இந்த சாலையை பல வருடங்களாக மாநகராட்சி நிர்வாகம் சீர் செய்யவில்லை என்பதும் இப்பகுதியில் உள்ள வார்டு உறுப்பினர் உட்பட அரசு அதிகாரிகள் யாரும் இதனை ஒரு பொருட்டாக கூட எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் வேதனை தருவதாக இப்பகுதியினர் கூறுகின்றனர்.

திருமலை தெரு சாலை

மதுரை நகருடன் அவனியாபுரத்தை இணைக்கும் முக்கிய சாலையாக இந்த சாலை கருதப்படுகிறது, இன்று இப்பகுதியில் வசிக்கும் பலரும் இந்த சாலையை உபயோகித்து வருகின்றனர் இவை எல்லாத்துக்கும் மேலாக இந்த சாலையின் ஒரு புறமாக கிட்டத்தட்ட 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

திருமலை தெரு சாலை

அங்கு வசிப்பவர்கள் கொசுத்தொல்லை காரணமாக அவதிப்படுவதோடு மட்டுமல்லாமல் இந்த கொட்டப்படும் குப்பைகள் காரணமாக டைஃப்பாய்ட், டெங்கு உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி மிகப்பெரிய சுகாதார சீர்கேட்டிர்க்கு ஆளாகின்றனர்.

இப்பகுதி வாசிகள் இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்த போதிலும் அவர்கள் இன்று வரை முறையான நடவடிக்கை எதும் எடுக்கவில்லை என்பது இந்த சாலையின் நிலையை பார்க்கும் நம்மால் கூட அறிந்துகொள்ள முடிகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மதுரைக்கு நவீன திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை காட்டிலும் இது மிக முக்கியமாக தீர்க்கப்பட வேண்டிய ஒரு அவல நிலையாகும். எனவே மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசாங்கம் இதனை கவனத்தில் கொண்டு இந்த சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி புதிய சீரான தார்ச்சாலை அமைக்கப்பட்டு மேலும் இங்கு குப்பைகளை கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து இதற்கு மேலும் இங்கு இதுபோல் குப்பைகள் கொட்டப்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பதே திருமலை தெரு வாசிகள் மட்டுமல்லாது அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது.

Published by:Arun
First published:

Tags: Local News, Madurai