Home /madurai /

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரையில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Samayanallur, India
    மதுரை மாவட்டம் தென்கரை சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட அய்யங்கோட்டை துணை மின்நிலையத்தில் சி.புதூர் பீடர் மற்றும் சோழவந்தான் துணை மின் நிலையத்தில் தென்கரை பீடர்களில் நாளை (செப்டம்பர் 14 புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    எனவே அய்யங்கோட்டை பகுதி முழுவதும், தென்கரை, ஊத்துக்குளி, முள்ளி பள்ளம் மன்னாடிமங்கலம் அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாந்திபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை சமயநல்லூர் மின்செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    இதேபோல, பேரையூர் உசிலம்பட்டி பகுதியில் உள்ள எழுமலை, டி.ராமநாதபுரம், டி.கிருஷ்ணாபுரம், சின்னகட்டளை, கொக்குளம் ஆகிய துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    எனவே எழுமலை, சூழப்புரம், உலைப்பட்டி, மல்லபுரம், அய்யம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, அதிகாரிபட்டி, துல்லுக்குட்டிநாயக்கனூர், டி.ராமநாதபுரம், டி.கிருஷ்ணாபுரம், உத்தபுரம், கோபாலபுரம், பள்ளப்பட்டி, இ.கோட்டைப்பட்டி, தாடையம்பட்டி, பாறைப்பட்டி, கோடாங்கிநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில் நாயக்கனூர், ஏ.பெருமாள்பட்டி, மானூத்து, சின்னக்கட்டளை, சேடப்பட்டி, குப்பல்நத்தம், மங்கல்ரேவு, எஸ்.கோட்டைப்பட்டி, கணவாய்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லிகுண்டம் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பொம்மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரிய கட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டிபட்டி, வீரபாண்டி, தொட்டணம் பட்டி, சலுப்பட்டி, குடுச்சேரி, ஜம்பலப்புரம், கேத்துவார்ப்பபட்டி, பேரையூர், சாப்டூர், அத்திபட்டி, அணைக்கரைப்பட்டி, புளியங்குளம், ஊத்துப்பட்டி, செக்கானூரணி, கெக்குளம் கே. ஒத்தப்பட்டி, கே பாறைப்பட்டி, சிக்கம்பட்டி, பன்னியான், தேங்கல்பட்டி, கண்ணனூர், மீனாட்சிபட்டி, கழுங்குபட்டி, மூணாண்டிபட்டி, ஜாங்கிட் நகர் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் அழகு மணிமாறன் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி