ஹோம் /மதுரை /

வெளிநாட்டுக்கு வேலைக்கு போறீங்களா? - மதுரை கலெக்டர் தந்த உதவி எண்களை தெரிந்துகொள்ளுங்கள்!

வெளிநாட்டுக்கு வேலைக்கு போறீங்களா? - மதுரை கலெக்டர் தந்த உதவி எண்களை தெரிந்துகொள்ளுங்கள்!

மதுரை

மதுரை

Madurai News | வெளிநாடுகளுக்கு வேலை செல்வோர்களா நீங்கள் இருந்தால், கட்டாயம் இதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

வெளிநாடுகளுக்கு வேலை செல்வோர்களா நீங்கள் இருந்தால் கட்டாயம் இதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இதுதொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு, தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர் மற்றும் கம்போடியா நாட்டிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை,

அதிக சம்பளம் என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கால் சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும், அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து தகவல் வருகிறது.

இதையும் படிங்க : ஆபாச உடை அணிந்து கரகாட்டம் ஆட கூடாது... நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இனிவரும் காலங்களில், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள், மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? என்ற விவரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொண்டும்.

அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிட்டால், தமிழ்நாடு அரசை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு, பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மை தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் வெளியுறவுத்துறை மற்றும் வேலைக்கு செல்லும் நாடுகளில் உள்ள இந்திய தூதரங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படியும், வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்பட்டால் 96000 23645, 87602 48625, 044-28515288 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக்கொள்ளலாம் என  கூறப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Madurai