மதுரை என்றாலே கோவில் நகரம் சொல்லுவாங்க அதற்குஏற்றமாதிரி, மதுரையில எக்கச்சக்கமான டூரிஸ்ட் ஸ்பாட்இருக்கின்றது. அப்படி முக்கியமான இடங்களில் ஒன்றுதான் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்.
இந்த தெப்பக்குளம் நாயக்க மன்னரால் தோண்டப்பட்டது என்கின்றனர் ஆய்வாளர்கள்.இது சமீபகாலமாக மினி பீச் என்று இப்பகுதி மககள் அன்போடு அழைக்கின்றனர். இந்த தெப்பக்குளம் தான் தற்பொழுது மதுரை மக்களுடைய பேவரட் ஸ்பாட் ஆக மாறியுள்ளது.
இந்த இடம் மதுரையின் முககியஷூட்டிங் ஸ்பாட்டாகவும் இருந்து வருகிறது. துரையில ஒரு படம் ஷூட் பண்றாங்கண்ணா கண்டிப்பா இந்த இடத்துலயும் ஒரு சீன் சூட் பண்ணி இருப்பாங்க. அப்படி இந்த இடத்தில ஷூட் பண்ண படங்களை ஒன்னு தான் ரஜினி முருகன்.
இந்த ரஜினி முருகன் படத்தில்,சிவகார்த்திகேயனும் சூரியும் உட்கார்ந்து பேசும் காட்சியும், ஜோசியம் பார்க்கும் காட்சியியும்இந்த பிளேஸ்ல தான் ஷூட் பண்ணி இருப்பாங்க.
தூங்கா நகரம் படத்தில்,வைகை சிரிச்சா தூங்க நகரம் என்னும் பாடல்முழுக்க முழுக்க மதுரையை பத்தி வரிகளே அமைந்திருக்கும். இந்தப் பாடல் கடைசியில்வடிவேல் இந்த குளக்கரையின் சுவற்றில் அமர்ந்து ஆடுவதுபோல் ஒரு சீனை எடுத்திருப்பாங்க.
மேலும், குள்ளநரி கூட்டம் படத்துல விஷ்ணு விஷால் போன் பேசுற மாதிரியான ஒரு சீனும், விஷால் நடித்த திமிரு படத்தில் மானாமதுரை சாங்கில் வரும் ஒரு சின்ன சீனையும், தகராறு படத்தில் திருட்டுப் பயலே என்ற ஒரு சாங்கில் ஒரு குட்டி சீனும் இந்தமதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில்தான்ஷூட் பண்ணிருப்பாங்க.இந்த மாதிரி நிறைய படங்களை இங்கே ஷூட் பண்ணி இருக்காங்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Shootin spot, Shooting, Tourist spots