Home /madurai /

கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு - செங்கல் கட்டுமான தொடர்ச்சியை கண்டறிய கூடுதல் குழிகள்

கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு - செங்கல் கட்டுமான தொடர்ச்சியை கண்டறிய கூடுதல் குழிகள்

கீழடி

கீழடி

Keeladi | கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வில் கூடுதல் குழிகள் தோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

கீழடியில் கடந்த ஆண்டுகளில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் ஜூலை-2ல் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சியை கண்டறிய கூடுதலாக குழிகள் தோண்டும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

கீழடி, அகரம் மற்றும் கொந்தகையில் 8ம் கட்ட அகழாய்வு பணிக்காக 15 குழிகள் தோண்டபட்டிருக்கின்றன. கீழடியில் ஏற்கனவே 7 குழிகள் தோண்டப்பட்டிருந்த நிலையில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் ஜூலை-2ல் சேதம் அடையாத செங்கற்களால் கட்டப்பட்ட நேர்த்தியான சுவர் கண்டறியப்பட்டது.

கீழடி குழிகள்


கிழக்கு நோக்கி இந்த சுவற்றின் தொடர்ச்சி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் கூடுதலாக குழிகள் தோண்டும் பணி தொல்லியல் துறை சார்பில் மீண்டும் தொடங்கியுள்ளது.

கீழடி குழிகள்


கீழடி சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் ஆங்காங்கே செங்கல் கட்டுமானங்கள் வெளிப்பட்டு வருவதால் கீழடி அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான செங்கல் கட்டுமானங்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது.

கீழடி குழிகள்


கீழடியில் நீள் வடிவ தாயகட்டை, பாசி மணிகள், பானைகள், பானை ஓடுகள் உள்ளிட்ட 400க்கும் குறைவான பொருட்களே கண்டறியப்பட்டுள்ளன.

கீழடி அகழ்வாய்வு இடத்துக்கு செல்வதற்கான கூகுள் மேப்..



கொந்தகையில் வரைபடம் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்த பின் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் மரபணு பிரிவுடன் இணைந்து முதுமக்கள் தாழிகள் திறக்கும் பணி நடைபெறும் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி