ஹோம் /மதுரை /

மதுரையில் உணவு பதப்படுத்துதல் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் மானியத்துடன் ரூ.30 லட்சம் வரை கடன்.. வழிமுறை என்ன?

மதுரையில் உணவு பதப்படுத்துதல் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் மானியத்துடன் ரூ.30 லட்சம் வரை கடன்.. வழிமுறை என்ன?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Madurai : மதுரை மாவட்ட தொழில் மையத்தில் உணவுப் பதப்படுத்துதல் தொழிலைத் தொடங்குவதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் வேளாண் விற்பனை துறையின் கீழ் செயல்பட்டு வந்த உணவுப் பதப்படுத்துதல் தொழில் திட்டமானது, தற்போது மாவட்ட தொழில் மையத்தின் மூலமும் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், பிரதமரின் உணவுப்பதப்படுத்துதலுக்கான குறுந்தொழில்கள் (பி.எம்.எப்.எம்.இ.,) நிறுவனத்தின் கீழ் தொழில் தொடங்க விண்ணபிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்கள், விவசாயம் சார்ந்த உணவுப்பதப்படுத்துதல் தொழில் நுட்பத்தை கையாளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி பருப்பு, எண்ணெய், சிறுதானிய மதிப்பு கூட்டுதல், மாவு தயாரித்தல் தொழில்களுக்கு அதிகபட்சம் ர 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெறமுடியும் என்றும், இதில் 35 சதவீத மானியமாக ரூ.10 லட்சம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : விஜய்சேதுபதி பட சூட்டிங் ஸ்பாட் இதுதானா! - அட இது நம்ம புதுக்கோட்டையில தாங்க இருக்கு!

இந்த தொழிலைத் தொடங்க வயது தடையில்லை என்றும், ஏற்கனவே தொழில் தொடங்கி நடத்தி வருபவர்கள் விரிவாக்கம் செய்வதற்கும், புதிய யூனிட் தொடங்குவதற்கும் இந்த திட்டத்தில் கடன் பெறலாம் என்றும், அதேசமயம் ஒருமுறை மானியம் பெற்றிருந்தால் மீண்டும் மானியம் வழங்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, தொழில் தொடங்க விரும்புபவர்கள் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Business, Local News, Madurai