முகப்பு /மதுரை /

மதுரை கலைஞர் நூலகம் விரைவில் திறப்பு.. எப்போது தெரியுமா?

மதுரை கலைஞர் நூலகம் விரைவில் திறப்பு.. எப்போது தெரியுமா?

X
கலைஞர்

கலைஞர் நூலகம்

Madurai Library | மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள கலைஞர் நினைவு நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை மெட்ரோ திட்டத்திற்கு அடுத்தபடியா மதுரையில் இன்னொரு பிரம்மாண்டம் என்று சொல்லக்கூடிய வகையில கலைஞர் நினைவு நூலகம் திறப்பு குறித்த அறிவிப்பு தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில், மதுரை தல்லாகுளம் பகுதியில் கலைஞர் நினைவு நூலகம் சுமார் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகின்றது.

இந்த நூலகத்தில் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான இலவச வைபை வசதியும் மாற்றுத்திறனாளிகளுக்கான ப்ரைலி வசதியும்,கலை அரங்கமும், குளிர்சாதன அரங்கம் என பல்வேறு வகையான வசதிகள் கொண்டு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகின்றது.

மேலும், நூலக கட்டமைப்புக்கு ரூபாய் 99 கோடியும் நூலகத்திற்கு தேவையான நூல்கள் கொள்முதல் செய்வதற்கு 10 கோடியும் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப சாதனங்களை கொள்முதல் செய்வதற்கு 5 கோடி என மொத்தம் 114 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான அரசாணை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கலைஞர் நினைவு நூலகத்திற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

top videos

    அதில், குழந்தைகள், பெரியவர்கள், போட்டி தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் பெண்கள் என அனைவருக்கும் பயன்தரக்கூடிய வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் இலக்கியம் பண்பாடு அறிவியல் பொருளியல் சட்டம் மருத்துவம் எனும் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் நூல்களுடன் இந்த கலைஞர் நினைவு நூலகம் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Local News, Madurai