ஹோம் /மதுரை /

மதுரையில் இருந்து அமிர்தசரஸ் சுற்றுலா ரயில் நாளை புறப்படுகிறது

மதுரையில் இருந்து அமிர்தசரஸ் சுற்றுலா ரயில் நாளை புறப்படுகிறது

சுற்றுலா ரயில்

சுற்றுலா ரயில்

Madurai District new | நாளை (வியாழக்கிழமை) மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தில் இருந்து, அமிர்தசரஸ் சுற்றுலா ரயில் புறப்பட்டு செல்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு “பாரத் கவுரவ்” என்று ஆன்மீக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, நாளை (3ம் தேதி) மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தில் இருந்து, அமிர்தசரஸ் சுற்றுலா ரயில் புறப்பட்டு செல்கிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிவிப்பில், அனுபவம் வாய்ந்த சுற்றுலா நிறுவனங்கள் இதுவரை 6 ஆன்மிகச் சுற்றுலா ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கியதால், ரூ.6.3 கோடி வருவாய் கிடைத்தது.

இதன் தொடர்ச்சியாக 7ஆவது சுற்றுலா ரயில், மதுரையில் இருந்து அமிர்தசரசுக்கு நாளை இயக்கப்படுகிறது. கூடல்நகர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் தெலுங்கானா மவுலாளி, ஜெய்ப்பூர்,ஆக்ரா, அமிர்தசரஸ் மற்றும் கோவா போன்ற சுற்றுலாத் தலங்களை இணைத்து இந்த ரயில் இயக்கப்படுகிறது.

Must Read : மேட்டுப்பாளையம் ரயில் நிலையம், தூரி பாலத்தில் ஷூட்டிங் நடத்தி ஹிட்டான படங்களின் லிஸ்ட்!

அதன்படி, கூடல்நகர்- அமிர்தசரஸ்-கூடல்நகர் சுற்றுவட்ட சுற்றுலா ரயில் (06905/06906) கூடல் நகரில் இருந்து நாளை (வியாழக்கிழமை) இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில், திருவனந்தபுரம், பாலக்காடு, போத்தனூர், சேலம், காட்பாடி வழியாக சென்று, வரும் 6ஆம் தேதி மவுலாளி, 8ஆம் தேதி ஜெய்ப்பூர், நவம்பர் 9ஆம் தேதி ஆக்ரா, 10ஆம் தேதி டெல்லி, 11ஆம் தேதி அமிர்தசரஸ், 13ஆம் தேதி கோவா போன்ற சுற்றுலாத் தலங்களை இணைக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர் மங்களூர், திருச்சூர், கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக வருகிற 16ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு மதுரை கூடல்நகரை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Madurai, Special trains