முகப்பு /மதுரை /

ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்யும் மதுரை இளைஞருக்கு ஒரு சல்யூட்..!

ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்யும் மதுரை இளைஞருக்கு ஒரு சல்யூட்..!

X
ஆதரவற்ற

ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்யும் மதுரை இளைஞர்

Madurai News | கடந்த 10 வருடங்களாக ஆம்புலன்ஸ் ஊழியராக வேலை பார்க்கும் மதுரையை சேர்ந்த பாண்டி எத்தனையோ இறப்புகளை தன் வாழ்நாளில் சந்தித்து கொண்டு வருகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

பிறப்பு மற்றும் இறப்பு என்பது இந்த உலகத்தின் நியதியாக உள்ளது. நாம் பிறக்கும்போது இந்த உலகம் எந்த அளவிற்கு அழுகிறதோ அதைவிட நாம் இறக்கும்போது அழுகின்றனர். ஆனால் உணர்ச்சிகள் மட்டும் வெவ்வேறு. நம் குடும்பத்தில் ஒருவரின் இறப்பை கூட நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கடந்த 10 வருடங்களாக ஆம்புலன்ஸ் ஊழியராக வேலை பார்க்கும் 8ம் வகுப்பு வரை படித்திருக்கும் மதுரையை சேர்ந்த பாண்டி எத்தனையோ இறப்புகளை தன் வாழ்நாளில் சந்தித்து கொண்டு வருகிறார்.

எத்தனையோ இறப்புச் செய்திகளை நாம் செவி வழியாக கேட்டும், பார்த்தும் இருக்கிறோம். ஆனால் இவரோ கோரமான விபத்துகள், கொடூரமான இறப்புகள், தற்கொலை உடல்கள் என நெருங்கியவர்கள் கூட தூக்காத அருவருப்பு தக்க உடல்களை தொட்டு தூக்கி பிணவறை வரை எடுத்துச் சென்று உறவினரிடம் ஒப்படைக்கும் மனித குலத்தின் மகத்தான சேவையை செய்து கொண்டிருக்கிறார்.

இவர் தன் வாழ்நாளில் சந்தித்த சவால்கள் ஏராளம். ஆனால் இவர் வாழ்க்கையில் மிகுந்த மன வருத்தத்தை தரக்கூடியதாக கூறுவது நமது சொந்தங்களான அம்மா, அப்பா, தம்பி, தங்கை என அனாதையாக எங்கேயோ இறந்து கிடக்கும் அந்த சொந்தங்களை, யார் என்றே தெரியாமல் எத்தனையோ அனாதை பிணங்களை எடுத்து அதனை இவர் சொந்த செலவில் அடக்கம் செய்யப்படும் அந்த தருணம் தான் என்கிறார்.

மேலும் ஓய்வே இல்லாமல் 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும் இவரும் இவரது அலைபேசியும் முன்பின் தெரியாத ஏதோ ஒரு மனிதனுக்காகவும் சமூகத்திற்காகவும் ஓடிக்கொண்டிருக்கிறார். தனது குடும்பங்களும் சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்கவோ அல்லது உட்காந்து சாப்பிடவோ நேரம் இல்லாமல் எந்நேரமும் உழைத்துக் கொண்டே இருக்கிறார். இவரின் சேவை சமூகத்தின் மத்தியில் கடவுளாக பார்க்கக்கூடிய நிலையில் உறவினர்கள் மட்டும் ஏதோ தள்ளி வைக்கும் நிலையில் இருக்கிறார்.

வாழ்க்கை ஓடி கொண்டு இருக்க இவரும் ஓடிக்கொண்டிருக்கக் கூடிய நிலையில் இவர் நம்மைப் போன்ற சில பேருக்கு கூறுவது ஒன்றே ஒன்று தான்,

நம்மை பெற்றெடுத்த பெற்றோர்கள் நம்மை வளர்த்து ஆளாக்குகிறார்கள். ஆனால் நாம் அதற்கு ஏதும் செய்யாமல் அவர்களை நடு ரோட்டில் அனாதையாக விட்டுவிட்டு செல்கிறோம். இந்த தவறை செய்யாமல் இருந்தால் இந்த உலகில் அனாதைகள் இல்லாமல் இருக்கும் என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Madurai