மதுரை ரயில் நிலையத்திற்கு வரும் இந்த ரயில்கள் சில தினங்களுக்கு ரத்து செய்யப்படும் என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தென்மாவட்ட பகுதிகளில் மதுரை கோட்டத்திற்கு உட்பட ரயில் தண்டவாள பகுதிகளில் பல்வேறு பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது.
இதில், தண்டவாளங்களை சீரமைத்தல், செடி, கொடிகளை அகற்றுதல், சிக்னல் விளக்குகளை சரி செய்தல் உள்ளிட்டவைகள் நடக்கின்றன. இதையொட்டி ரயில் போக்குவரத்தில் சில தினங்கள் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், ரயில் போக்குவரத்தில் மாற்றமும் செய்யப்படுகிறது.
அதன்படி, மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு செங்கோட்டை புறப்படும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரயில் (வண்டி எண்.06663) மற்றும் செங்கோட்டையிலிருந்து காலை 11.50 மணிக்கு மதுரை புறப்படும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரயில் (வண்டி எண்.06664) ஆகியவை வரும் 6ம் தேதி மற்றும் 7ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மதுரை - விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16868) வரும் 5ம் தேதி முதல் வரும் 10ம் தேதி வரையும், வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலும் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
ராமேஸ்வரம் - மதுரை எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரயில் (வ.எண்.06654) இன்று (வியாழக்கிழமை) முதல் வரும் 31-ம் தேதி வரை வியாழக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 12 மணிக்கு புறப்படும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அதேபோல், மதுரை - கச்சக்குடா (செகந்திராபாத்) வாராந்திர சிறப்பு ரயில் வரும் 7ம் தேதி மதுரையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு பதிலாக அதிகாலை 6.30 மணிக்கு புறப்படும். இவ்வாறு ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Southern railway