முகப்பு /செய்தி /மதுரை / "அண்ணாமலை இல்லை... அந்த ஆண்டவனே கேட்டாலும் முடியாது..." - செல்லூர் ராஜூ பரபரப்பு பேச்சு

"அண்ணாமலை இல்லை... அந்த ஆண்டவனே கேட்டாலும் முடியாது..." - செல்லூர் ராஜூ பரபரப்பு பேச்சு

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

அண்ணாமலை சொன்னதால்தான் மத்திய அரசு நிலக்கரி சுரங்க திட்டத்தை கைவிட்டது என்று கூறுவது ஏற்புடையதல்ல என்று தெரிவித்த செல்லூர் ராஜூ, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததால்தான் நிலக்கரி சுரங்கம் வரவில்லை என்றார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Madurai, India

அண்ணாமலை கேட்டதால் மட்டும் அல்ல, ஆண்டவனே கேட்டிருந்தாலும் டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் நடத்த முடியாது? என்று மதுரையில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக  அலுவலகத்தில் உறுப்பினர் படிவம்  வழங்கும் நிகழ்வை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

அண்ணாமலை சொன்னதால் , தான் மத்திய அரசு நிலக்கரி சுரங்கம் திட்டத்தை கைவிடப்பட்டது என்பது ஏற்புடையது அல்ல.   அண்ணாமலை  கேட்டதால் மட்டும் அல்ல? அந்த ஆண்டவனே கேட்டிருந்தாலும்,   டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் நடத்த முடியாது?  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், நிலக்கரி சுரங்கம் நடத்த முடியாது, சட்டத்தில்  இடம் இல்லை. எனவே கைவிடப்பட்டது.

திமுக அரசு புதிதாக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. மதுரையில் நேற்று திறக்கப்பட்ட பறக்கும் பாலம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.

பிரதமர் மோடியிடும்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய  திட்டங்களுக்காக கோரிக்கை வைத்தது தவறு இல்லை. வழக்கமான ஒன்றுதான்.

டெல்டா பாதுகாக்கப்பட்டதற்கு முழுக்க முழுக்க காரணம்  முதல்வராக இருந்த  எடப்பாடி பழனிச்சாமி தான். கொரோனா தற்போது மீண்டும் பரவ தொடங்கி உள்ளது. கொரோனா முதல் அலையின்போதே,  தேவையான உள்கட்டமைப்பு  வசதிகளை அதிமுக செய்து விட்டது. தற்போது பயப்பட வேண்டிய சூழல் இல்லை.

இவ்வாறு மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ,  தெரிவித்துள்ளார்.

First published:

Tags: ADMK