மதுரை புது ஜெயில் ரோட்டில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் சுமார் 1300 க்கும் மேற்பட்டோர் சிறை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள சிறை கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றது.
அதில் ஒரு பகுதியாக சிறை கைதிகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கக்கூடிய வகையிலும் அறிவுத்திறனை வளர்க்கக்கூடிய வகையிலும் சிறை நூலகம் திட்டம் ஒன்று சமீபத்தில் கொண்டுவரப்பட்டது.
இந்தத் திட்டத்திற்காக சிறைத்துறை டிஐஜி பழனி கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த் கண்ணன் உள்ளிட்டோர் பல்வேறு வகையான புத்தகங்களை சேகரித்து வந்த நிலையில் இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் பல்வேறு வகையான ஆதரவுகள் அதாவது இலவசமாக புத்தகங்களை வழங்கி வந்தனர்.
இந்தத் திட்டம் கைதிகளுக்கு ஊக்கப்படுத்தக் கூடிய வகையில் இருப்பதால், திரைப்பட நடிகரான விஜய் சேதுபதி திரைத்துறை டிஐஜி பழனி கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த் கண்ணன் ஆகியோரை நேரில் சந்தித்து சிறைத்துறை கைதிகள் பயன்பெறும் வகையில் ஆயிரம் புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.
இதுகுறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசும்பொழுது, ‘சிறைக் கைதிகளை புத்தகங்கள் மூலம் நல்வழிப்படுத்தும் முயற்சியை பாராட்டுகிறேன். இது பற்றி கேள்விப்பட்டதும் நிறைய புத்தகங்களை வழங்கவேண்டும் எனக் கருதினேன். தற்போது, உசிலம்பட்டி பகுதியில் சினிமா ஷூட்டிங்கில் இருப்பதால் முதல் கட்டமாக 1000 புத்தகங்களை வழங்குகிறேன். இலக்கியம், கிராமத்து பின்னணி, கைதிகளை நல்வழிப்படுத்தும் போதனை உள்ளிட்ட பல்வேறு விதமான புத்தகங்களை வழங்கியுள்ளேன். சிறைத் துறை அதிகாரிகளின் இந்த முயற்சிக்கு பாராட்டு. இத்திட்டம் வெற்றி பெறவேண்டும்’என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay Sethupathi, Local News, Madurai, Prison