ஹோம் /மதுரை /

அனுமதியின்றி இனிப்பு, கார வகைகளை விற்கக்கூடாது - மதுரையில் எச்சரிக்கை

அனுமதியின்றி இனிப்பு, கார வகைகளை விற்கக்கூடாது - மதுரையில் எச்சரிக்கை

இனிப்பு வகைகள்

இனிப்பு வகைகள்

Madurai | தீபாவளிக்கென்றே சிலர் வீடுகளில் இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து விற்பனை செய்துவரும் நிலையில், அனுமதியின்றி கடைகள் திறக்கக்கூடாது என்று மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் எச்சரித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

நாடு முழுவதும் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் மக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருது வகைவகையான இனிப்பு வகைகளும், பட்டாசும்தான்.

அந்த வகையில், இனிப்பு வகைகளை தயாரித்து விற்பனை செய்வது தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இளிப்பு வகைகளில் சேர்க்கப்படும் நிறமிகள் குறித்தும், அவற்றின் தரம் குறித்தும் மதுரையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் கூறுகையில், “உணவில் இயற்கை வண்ணங்களை சேர்க்கலாம். கண்ணை பறிக்கும் செயற்கை வண்ணங்களுக்கு காலாவதி தேதியே கிடையாது.

இதையும் படிங்க : சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு இப்படியொரு பெயரா.!

தொடர்ந்து இந்த வண்ணங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் புற்றுநோய் உருவாகும். எனவே, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிறங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு கிலோ மாவுக்கு 100 மில்லி கிராம் என்ற அளவில் மட்டுமே சேர்க்கலாம்.

சிறுவர்களை வாங்க துாண்டும் வகையில் அதிகளவில் நிறங்களை சேர்க்கக்கூடாது. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெய்யை ‘ரூகோ’ எனப்படும் எரிபொருளாக்கும் திட்டத்தின் கீழ் ஒப்படைக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திடீரென சிறு சிறு கடைகள், வீடுகளில் இனிப்பு, காரவகைகள் செய்து விற்கக்கூடாது. அதற்கென ரூ.100 கட்டணம் செலுத்தி பதிவுச்சான்றிதழ் பெற்ற பின்பே விற்பனையை தொடங்க வேண்டும். மீறி செயல்பட்டால் பொருட்கள் அனைத்தும் அழிக்கப்படும். அதேபோல கண்ணை கவரும் வண்ணங்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும், அந்த உணவு பொருட்கள் அழிக்கப்படுவதோடு,நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Madurai