Home /madurai /

ஆரப்பாளையம் பேருந்து நிலையம் இடமாற்ற திட்டம் என்ன ஆனது?

ஆரப்பாளையம் பேருந்து நிலையம் இடமாற்ற திட்டம் என்ன ஆனது?

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம்

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம்

Madurai Arapalayam Bus Stand : மதுரை ஆரப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அங்குள்ள பேருந்து நிலையத்தை இடம் மாற்றும் திட்டம் என்ன ஆனது என்ற கேள்வி தற்பொழுது மக்கள் மத்தியில்  எழுந்துள்ளது.

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தேனி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கும்,  கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதோடு நகர் பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. இதனால் இங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக பேருந்து நிலையத்தை இடம்மாற்ற முடிவு செய்யப்பட்டது.

கோச்சடை லாரி டெப்போ:

பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை கோச்சடை லாரி டிப்போவிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது, இதற்கான செலவுகள் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் மாநகராட்சி நிதி நிலை மோசமாக இருந்ததன் காரணமாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

விளாங்குடியில் நிலம் தேர்வு:

2014ல் இத்திட்டமானது மாற்றப்பட்டு ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை மாற்ற விளாங்குடியில் உள்ள அரசுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. வெளியூர் பேருந்துகள் விளாங்குடி வந்து செல்லும் பொருட்டு, நகரப் பேருந்துகள் ஆரப்பாளையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பல ஆண்டுகளாகியும் தற்போது வரை பேருந்து நிலையமானது மாற்றி அமைக்கப்படவில்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுகுறித்து ஆரப்பாளையம் பேருந்து நிலைய பகுதியில்  கடை வைத்திருந்தவர்கள் கூறியதாவது, “போக்குவரத்து நெரிசல் முன்பை விட தற்போது அதிகரித்து தான் உள்ளது. அதுமட்டுமல்லாமல் சாலையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.  அதனால் வாகன நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு சாலையின் இரு மார்க்கமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன, போக்குவரத்து நெரிசலை குறைக்க காளவாசல் பகுதியில் பாலம் அமைத்தும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை” என்று தெரிவித்தனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி