முகப்பு /மதுரை /

மதுரை ஞாயிற்றுக்கிழமை சந்தையின் ஆச்சரியப்படுத்தும் வரலாறு தெரியுமா? இத்தனை சிறப்புகளா?

மதுரை ஞாயிற்றுக்கிழமை சந்தையின் ஆச்சரியப்படுத்தும் வரலாறு தெரியுமா? இத்தனை சிறப்புகளா?

X
மதுரையில்

மதுரையில் உள்ள சண்டை மார்க்கெட்

Madurai Sunday market | மதுரை உலக தமிழ்ச் சங்கம் இருக்கக்கூடிய ஞாயிற்றுக்கிழமை சந்தையில் இரும்பு முதல் பல்வேறு வகையான பொருட்களும், செகண்ட் ஹேண்ட் பொருட்களும் விற்கப்படுகின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை உலக தமிழ்ச் சங்கம் ரோடு என்றாலே முதன் முதலில் நினைவிற்கு வருவது ஞாயிற்றுக்கிழமை சந்தை தான். இந்த ஞாயிற்றுக்கிழமை சந்தைல என்ன இருக்குன்னு கேட்டீங்கன்னா இந்த சந்தையில இரும்பு பொருட்களான இரும்பு நட்டுல இருந்து இரும்பு கதவு, இரும்பு வாலி மண்வெட்டி சுத்தியல் இரும்பு கம்பி இரும்பு சங்கிலி இரும்பு சமையல் பொருட்கள் ஆன கடாய் சட்டி அடுப்புகள் என எல்லா வகையான இரும்புப் பொருட்களை இவங்களே தயார் பண்ணியும் வெளியிலிருந்து வாங்கியும் இந்த இங்கு விற்பனை செய்கின்றார்கள்.

அலுமினியம் சில்வர்களில் வாலி டூல்ஸ் பொருட்கள் ஸ்டாண்ட் சங்கிலி போன்ற பொருட்கள் என இருவதற்கும் மேற்பட்டு இங்குள்ள கடைகளில் அதிகமாக இரும்பு பொருட்களை தான் விற்பனை செய்கிறார்கள் என்று கூட சொல்லலாம். இதுபோக இந்த சந்தையில் மூலிகை கடை, அதாவது எல்லா வகையான மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகளான சின்ன சின்ன நோய்களான சளி காய்ச்சலில் இருந்து சக்கர நோய்க்கு கூட இந்த மூலிகைகள் இருக்கிறது என்று சொல்றாங்க.

நாய்,கோழி, முயல் போன்ற செல்லப் பிராணிகளும் மண்பானை, சட்டி அடுப்பு போன்ற மண்பாண்ட கடைகளும் உள்ளன. மேலும் மரக்கடைகளில் கதவு, ஜன்னல், சுத்திகள், கைப்பிடி, மண்வெட்டிபோன்ற மரச் சாமான்களை இவர்களை தயார் பண்ணி விற்பனை செய்கின்றார்கள்.

இப்படி இந்த ஞாயிற்றுக்கிழமை சந்தையில்50-க்கும் மேற்பட்டகடைகள் இருக்குன்னு சொல்றாங்க. ஆனா, இதே சந்தையிலே தான் ஐம்பது வருடத்திற்கு முன்பாக காய்கறி கடை பல கடை மீன் கடை, கருவாடு கடை கோழி கடை ஆடு கடை இரும்பு கடை மரக்கடை என எல்லா வகையான பொருட்களும் விற்கக் கூடிய இடமாக இருந்ததாம்.

அப்படி மக்கள் எல்லாரும் ஒன்னு கூடுற இந்த இடத்தில் தான் எம்ஜிஆர், காமராஜர், நேரு, இந்திரா காந்தி என பெரிய பெரிய அரசியல் கட்சி தலைவர்கள் மேடை போட்டு பேசிய இடமாக இருந்ததாம். அப்போதெல்லாம் தரையில் போட்டு தான் கடைகளை நடத்தினார்கள் பின்பு தான் கூரை தார்ப்பாய், காலப்போக்கில்தற்பொழுதுஇந்த சந்தை இரும்பு மூலமாக செய்யப்பட்ட ஒவ்வொரு கடையாக மாறிவிட்டது என்று கூறுகின்றார்கள்.

இது போக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இந்த சந்தைக்கு வெளியே, அதாவது தமிழ்ச்சங்கம் ரோடு முழுவதும் செகனண்ட் பொருட்களும் புதிய பொருட்களும் விற்பனை செய்யப்படுமாம். எலக்ட்ரிக் ஐட்டம்ஸ்டிவி, ரேடியோ, பேன், லைட், வயர், பிளக் பாயிண்ட், மோட்டர், மிக்ஸி, கிரைண்டர்,சில்வர் பாத்திரம், அடுப்பு, பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற எல்லா வகையான பொருட்களையும் காலைல 8 மணியிலிருந்து மதியம் 2 அல்லது 3 மணி வரைக்கும் இங்கு விற்பனை நடைபெறுகிறது.

First published:

Tags: Local News, Madurai