Home /madurai /

வாது வென்ற பிள்ளையார்... சுவாரஸ்ய தகவல்கள்! - விநாயகர் சதுர்த்திக்கு மதுரையில் வழிபடவேண்டிய தலம்

வாது வென்ற பிள்ளையார்... சுவாரஸ்ய தகவல்கள்! - விநாயகர் சதுர்த்திக்கு மதுரையில் வழிபடவேண்டிய தலம்

மதுரை விநாயகர் கோவில்

மதுரை விநாயகர் கோவில்

மதுரையில் வைகை ஆற்றின் கரையில் சோழவந்தான் அருகே திருவேடகத்தில் வீற்றுள்ளார் திருஞானசம்பந்தருக்கு அருள் புரிந்த வாது வென்ற விநாயகர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
    ஆற்றங்கரைகளில் விநாயகர் கோயில்கள் ஆங்காங்கே இருப்பதைக் காணலாம். அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பும் அதற்கே உரிய கதைகளும் நம்பிக்கைகளும் இருப்பதை காணமுடியும். அந்த வகையில், மதுரையில் வைகை ஆற்றின் கரையில் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகத்தில் வீற்றுள்ள வாது வென்ற விநாயகர் தனிச்சிறப்புடன் விளங்குகிறார்.

    மதுரையில் சைவ சமயத்திற்கும் சமணத்திற்கும் இடையே பெரும் வாதம் நடைபெற்றது. திருஞான சம்பந்தருக்கும், சமணர்களுக்கும் இடையே நடந்த அந்த சமயவாதத்தில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்க பாண்டிய மன்னன் அனல் (நெருப்பு) வாதம், புனல் (நீர்) வாதம் ஆகியவற்றை ஏற்பாடு செய்தான். அதன்படி, அனல் வாதத்தில் சமணர்கள் தோற்றனர். பின்னர் புனல் வாதம் தொடங்கியது.

    அப்போது இருவரும் தங்களின் சமய கருத்துக்களை ஓலைச்சுவடியில் எழுதி வைகை ஆற்றில் விடுவது என்றும், எவருடைய ஏடுகள் ஆற்றை நீந்திச் செல்கிறதோ அவர்களே வென்றவர் என்றும் தீர்மானிக்கப்பட்டது. திருஞானசம்பந்தர் பாடலைப் பாடி அதை ஓலையில் எழுதி ஆற்றில் விவட்டார். சமணரும் தமது பாடலை ஓலையில் எழுதி ஆற்றில் விட்டார். அப்போது, திருஞானசம்பந்தர் இட்ட ஓலை ஆற்றை எதிர்த்து நீந்தியதாகவும். சமணர் இட்ட ஓலைகள் நீரில் மூழ்யதாகவும் எஞ்சியவை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன என்றும் சொல்லப்படுகிறது.

    திருஞானசம்பந்தர் வைகை ஆற்றில் விடுத்த ஏட்டைத் தொடர்ந்து குலச்சிறையாரும் வீரர்களும் கரையோரமாகவே சென்றனர். பதினைந்து மைல்களுக்கு அப்பால் நீந்தி சென்ற அந்த ஏடு நிலை பெற்றது. அப்போது அந்த ஏட்டை விநாயகர் எடுத்து, குலச்சிறையாரிடம் கொடுத்தார் என்றும் அதை எடுத்துக்கொண்டு அவர் மதுரையை அடைந்து வாதில் வெற்றி பெற்றதை அறிவித்தார் என்ற செவிவழிச் செய்தி நிலவிவருகிறது. அப்படி ஏடு அடைந்து இடம் இந்நாளில் திருஏடகம் என அழைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்தில் பெருமானைப் பாடி வழிபட்டார்.

    இந்த திருஏடகம் வைகை ஆயாற்றின் கரையில் அமைந்துள்ளது. அதன் படித்துறையில் ஞானசம்பந்தர் இட்ட ஓலையானது நாற்புறத்திலும் மீன்கள் சூழ நீந்தி வருவதும், அதை விநாயகர் எடுப்பதும் போன்ற புடைப்புச் சிற்பங்கள் இருப்பதைக் காணமுடியும். இங்கு பாண்டிய மன்னன் விநாயகருக்கு அமைத்த சிறிய கோவில் உள்ளது. அந்த விநாயகர் வாது வென்ற பிள்ளையார் எனப்படுகிறார். வாதத்தில் திருஞான சம்பந்தர் என்ற நிலையில், அங்குள்ள விநாயகர் வாது வென்ற பிள்ளையார் என்ற பெயருடன் காட்சியளிக்கிறார். திருஞான சம்பந்தருக்கு பிள்ளையார்தான் ‘ஏடகம் வன்னி’ என்று அடி எடுத்துப் பாட அருள் புரிந்தார் என்று சொல்லப்படுகிறது.

    அதன்படி “வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன்,
    பொன் இயல் திருவடி புதுமலர் அவைகொடு
    மன்னிய மறையவர் வழிபட, அடியவர்
    இன் இசை பாடல் ஆர் ஏடகத்து ஒருவனே...” என்று திருஞான சம்பந்தர் பாடினார்.

    இந்த வாது வென்ற பிள்ளையாரை, விநாயகர் சதுர்த்தியில் வழிபட்டால் ஏராளமான நம்மைகள் நடைபெறும் என்ற நம்பிகை நிலவுகிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி