ஹோம் /மதுரை /

மதுரைக்கு வருகிறது 5.கி.மீ தூரத்துக்கு புதிய பறக்கும் பாலம்.! 

மதுரைக்கு வருகிறது 5.கி.மீ தூரத்துக்கு புதிய பறக்கும் பாலம்.! 

புதிய பாலம் அமைத்தல்

புதிய பாலம் அமைத்தல்

மதுரையில் தற்போது ஏற்படும்  போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் தற்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் நோக்கில், நெல்பேட்டை முதல் அவனியாபுரம் வரை 5.கிமீ தூரத்துக்கு மற்றொரு பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

1989ம் ஆண்டு, 500 மீட்டர் நீளத்திலும், 12 மீட்டர் அகலத்திலும் ரூ.70 லட்சம் செலவில், மதுரை தெற்குவாசல்-வில்லாபுரம் சாலையில், ரயில் வழித்தடத்தை கடக்க மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.அப்போதே, இந்த பாலத்தில் இரு வழி தடமாக வாகனங்கள் செல்லும் வகையில் கட்டப்பட்டது.

மேலும், பீக் ஹவர்ஸ்சில் செல்லும் போது, இந்த பாலம் குறுகலாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மேலும், அங்கு அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.இந்த பாலம் தற்போது, வரை பராமரிப்பும் இல்லாமலும், விபத்துக்களும் நடப்பதாலும் இந்த பாலத்தை மாற்றி புதிய பாலம் அமைக்க நடவடிக்கை கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

இதையொட்டி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள், “இந்த மேம்பாலம் பராமரிக்கப்பட இருக்கிறது. பாலத்தின் உயரத்தை உயர்த்தவும் தெற்கு ரயில்வே சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பாலம் வலுவாக இருப்பதால், புதிய பாலம் கட்டும் திட்டம் இல்லை என்று தெரிவித்தனர்.

மேலும், இந்த பாலத்தில் விபத்துகள் அதிகம் நடப்பதாலும், விபத்தையும், போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும் விதமாக அதன் அருகில் நிலத்தை ஆர்ஜிதம் செய்து பாலம் அமைக்க திட்டம் உள்ளது. மேலும், புதிய பாலம் நெல்பேட்டையில் இருந்து ஆரம்பித்து அவனியாபுரம் வரை 5.கி.மீ. தூரத்துக்கு அமைய இருக்கின்றது என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Local News, Madurai