முகப்பு /மதுரை /

பிளாஸ்டிக்கை ஒழிக்கவும், பெண்களை செழிக்க வைக்கும் வகையில் மதுரை பட்டதாரியின் சுயதொழில் முயற்சி

பிளாஸ்டிக்கை ஒழிக்கவும், பெண்களை செழிக்க வைக்கும் வகையில் மதுரை பட்டதாரியின் சுயதொழில் முயற்சி

X
எத்தனையோ

எத்தனையோ பெண்களின் வாழ்வாதாரம் செழிக்கும் வகையில் சுயதொழில் முயற்சி

Madurai News | கஷ்டப்படும் பெண்கள் என முழுக்க முழுக்க பெண்களே இங்கு வேலை பார்த்து வருகின்றார்கள்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

பிளாஸ்டிக்கை ஒழிக்கவும் பெண்களை செழிக்க வைக்கும் வகையில் பட்டதாரியின் சுயதொழில் முயற்சியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான கௌரி சென்னையில் உள்ள ஐடியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை எரிப்பதை பார்த்து தனது ஐ டி வேலையை கைவிட்டு விட்டு பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்று மதுரையில் எல்லோ பேக் பவுண்டேஷன் என்ற ஒன்றை ஆரம்பித்து அதன் மூலமாக மஞ்சப்பை, தாம்பூலம் பை, ஹேண்ட் பேக், காலேஜ் பேக் என விதவிதமான துணி பைகளை தற்பொழுது செய்து கொண்டிருக்கின்றார்.

இந்த தொழிலில் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்த பெண்கள் கஷ்டப்படும் பெண்கள் என முழுக்க முழுக்க பெண்களே இங்கு வேலை பார்த்து வருகின்றார்கள். இதன் மூலம் இங்குள்ள கஷ்டப்படும் பெண்களின் வாழ்வாதாரம் முன்னேறும் வகையில் இருக்கின்றது.

இவர்கள் துணிகளை வெட்டுவதில் இருந்து அதற்கு அழகேற்றம் வகையில் பெயிண்டுகளை வைத்து பிரிண்ட் செய்வதிலிருந்து அதனை தைத்து முடித்து ஒரு முழு பையாக தயாரிப்பது வரை பெண்களை செய்து கொண்டிருக்கின்றார்கள். இது போக வாடிக்கையாளர்கள் இந்த மாதிரியான பைகள் எங்களுக்கு வேண்டும் என்றால் அதனையும் பெண்களே டிசைன் செய்து வாடிக்கையாளர்களுக்கு ஏற்றார் போல் தைத்து கொடுக்கின்றார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இங்கு கல்யாணத்திற்கு தேவைப்படும் பைகள், தாம்பூலம் பை, புடவை வைத்து கொடுப்பதற்கான பை, துணி பவுச், டிராவல் பை, காலேஜ் பேக்,ஹேண்ட் பேக் போன்ற விதவிதமான துணி பைகளை மொத்தமகவும் ஆகவும் சில்லறையாகவும் ஆகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்று ஆரம்பித்த இத்தொழில் தற்பொழுது எத்தனையோ கஷ்டப்படும் பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றம் வகையில் உள்ளது.

First published:

Tags: Local News, Madurai