முகப்பு /செய்தி /மதுரை / மிட்டாய் திருடியதாக மாணவர்களை தூண்களில் கட்டி வைத்து அடித்த கடைக்காரர்... மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!

மிட்டாய் திருடியதாக மாணவர்களை தூண்களில் கட்டி வைத்து அடித்த கடைக்காரர்... மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!

தூணில் கட்டிவைத்து சித்திரவதை

தூணில் கட்டிவைத்து சித்திரவதை

Madurai | சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ காட்சிகளின் ஆதாரத்தை வைத்து கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார்.

  • Last Updated :
  • Madurai, India

திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தில் பெட்டிக்கடையில் மிட்டாய் திருடியதாக கூறி மாணவர்களை தூண்களில் கட்டி வைத்து அடித்த விவகாரத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜபாளையம் சாலையில் உள்ள ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 65). இவர் அதே ஊரில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதிய வேளையில் சந்தோஷ் மகள் வயல் வேலைக்கு சென்று விட்டார் . இதனால் கடையின் பாதி கதவை மூடி வைத்து கடைக்குள்ளே சந்தோஷ் படுத்து உறங்கியுள்ளார்.

அப்போது கடைக்கு வந்த பள்ளி மாணவர்கள் ஐந்து பேர் சந்தோஷ் உறங்குவதை அறிந்து கடையில் இருந்த மிட்டாய்களை திருடியதாக சொல்லப்படுகிறது. அச்சமயம் கடைக்கு வந்த சந்தோஷின் மகள் கூச்சலிடவே அதில் மூன்று மாணவர்கள் தப்பி ஓடி விட்டனர். இரண்டு பேரை பிடித்து மிட்டாய் திருடியதற்காக சத்தம் போட்டு உள்ளார்.

இந்நிலையில் கடையில் உறங்கிக் கொண்டிருந்த சந்தோஷ் சத்தம் கேட்டு எழுந்து வந்து மாணவர்களை விசாரித்து அவர்களை தூணில் கட்டி வைத்து அடித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து வீடியோ காட்சிகளின் ஆதாரத்தை வைத்து கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் அளித்த புகாரின் அடிப்படையில், கடை உரிமையாளர் சந்தோஷ் மீது திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்சிவக்குமார்திருமங்கலம்

First published:

Tags: Madurai