முகப்பு /மதுரை /

மதுரை மடீட்சியா அரங்கில் கட்டிட கண்காட்சி.. ஆர்வமுடன் பார்த்த பொதுமக்கள்!

மதுரை மடீட்சியா அரங்கில் கட்டிட கண்காட்சி.. ஆர்வமுடன் பார்த்த பொதுமக்கள்!

X
மதுரையில்

மதுரையில் கட்டிட கண்காட்சி

Madurai District | மதுரை மாவட்டம் மடீட்சியா அரங்கில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் முன்னேறும் வகையில் கட்டிட கண்காட்சி நடைபெறுகின்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை கோர்ட் ரோடு பகுதியில் உள்ள மடீட்சியா அரங்கில் கட்டிட கண்காட்சி நடைபெற்று வருகின்றது.இந்தக் கண்காட்சியை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ரிப்பன் வெட்டி தொடக்க வைத்தார்.

கட்டுமானத் துறையில் ஏற்பட்ட நவீன தொழில்நுட்பங்கள் புதிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் வகையில்,கட்டுமானத் துறைக்கு தேவையான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில்இந்த கண்காட்சி நடைபெறுகின்றது.

இந்த கண்காட்சியில் பாரம்பரியமான கட்டுமான முறைகள் பற்றியும், புதிய தொழில்நுட்ப முறைகள் பற்றியும், எளிய முறையில் வீட்டு கடன் பெறுவதற்கான ஆலோசனை பற்றியும் நவீன கட்டுமான பொருட்கள் மற்றும் பெயிண்ட் ரகங்கள், சோலார் லைட், வீடுகளுக்கு தேவைப்படும் சமையல் பொருட்கள், வீட்டு கிச்சன் செட் என நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளது.

இந்த கண்காட்சியை மதுரை மக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். இந்த கண்காட்சி நேற்று வரை நடைபெற்றது.

First published:

Tags: Local News, Madurai