மதுரையில் திருமணம் முடிந்த கையோடு தான் பாசமாய் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை புகுந்த வீட்டிற்கு சீராக அழைத்துச் சென்றிருக்கிறார் மணப்பெண் ஒருவர்.
மதுரை என்றாலே நினைவுக்கு வருபவற்றுள் ஜல்லிக்கட்டும் ஒன்று.. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை வளர்த்து வருபவர்கள் மதுரையில் ஏராளம். இவர்களுக்கு ஜல்லிக்கட்டு காளையை, வீட்டில் உள்ள ஒரு குடும்ப உறுப்பினர் போலத்தான் பாவிப்பார்கள்.. காளைக்கும் அதன் உரிமையாளர்களுக்குமான பந்தம் என்பது சொல்லில் அடங்காத ஒரு உணர்வு..
அந்த வகையில் மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள ஐயங்கோட்டை என்ற கிராம்த்தைச் சேர்ந்த சிவப்பிரியாவுக்கும் நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டிக்கும் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் வெகு விமரிசையாக திருமணம் நடந்தது.
மணமகள் சிவப்பிரியா, தான் பாசமாய் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை அழகுப்படுத்தி மணமேடைக்கு அழைத்து வந்து மணமகள் ராஜபாண்டியுடன் சேர்ந்து காளைக்கு முத்தமிட்டு போட்டோ எடுத்துக் கொண்டார்.
பின்னர் காளையை பிரிய மனமின்றி அதை திருமண சீராக தனது புகுந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றார் சிவப்பிரியா. திடீரென மேடைக்கு ஜல்லிக்கட்டு வந்ததை பார்த்த மணமகன் வீட்டாரும், திருமணதுக்கு வருகை தந்த விருந்தினர்களும் சிவப்பிரியாவின் செயலால் நெகிழ்ந்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jallikattu, Local News, Madurai