முகப்பு /மதுரை /

நம்ம மதுரைக்கும் வந்திருச்சு 750ml பிரெஷ் ஜூஸ்.. மாட்டுத்தாவணி பக்கத்துல ஒரு செம ஸ்பாட்..

நம்ம மதுரைக்கும் வந்திருச்சு 750ml பிரெஷ் ஜூஸ்.. மாட்டுத்தாவணி பக்கத்துல ஒரு செம ஸ்பாட்..

X
மதுரையில்

மதுரையில் முதல் முதலாக மாட்டுத்தாவணியில் 750 ஃப்ரெஷ் ஜூஸ் விற்கப்படுகின்றது

Madurai Fresh Juice: மதுரையிலேயே முதல்முறையாக மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் அருகில் 750 எம்எல் பிரெஷ் ஜூஸ் விற்கப்படுகின்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

நம்ம மதுரையிலையும் 750எம்எல் ஜூஸ் விற்கப்படுகின்றது. எங்கன்னு கேட்குறீங்களா.  சுந்தரம் பார்க் ஆப்போசிட்ல மாட்டுத்தாவணி போற வழியில இருக்கிற ஜாலி ஜூஸ் கடையில தான் இந்த பிரஸ் ஜூஸ் விற்பனைக்கு வந்திருக்கு .

சென்னை போன்ற பெரிய நகரங்களில் விற்கப்பட்டிருந்த இந்த ஜூஸ் மதுரையிலேயே முதல்முறையாக இந்த கடையிலதான் ஆப்பிள், ஆரஞ்சு, பைனாப்பிள்,மாதுளை என எல்லா வகையான பழங்களிலும் 750ml அளவில் ஃப்ரெஷான ஜூஸ் நூறு ரூபாய்க்கு கொடுத்துட்டு இருக்காங்க..

இது போக இங்க முஜிட்டோஸ் ஷேக்ஸ் என வெரைட்டியான ஜூஸ் இங்க இருக்கு. மாலை வேளையில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வந்து இந்த இடத்துல கொஞ்சம் நேரம் செலவழிச்சா செம்மையா இருக்கும்.

இதையும் படிங்க:  ஐஸ்கிரீம் பானிபூரி சாப்பிட்டிருக்கீங்களா? மதுரை தெப்பக்குளத்தில் மக்களை கவர்ந்திழுக்கும் பானிபூரி ஸ்டால்..

இந்த கடையும் ஓபன் டைப்பா இருக்கறதுனால ஏதோ பைபாஸ் ரோட்டில் உட்கார்ந்து ஜூஸ் குடிப்பது போன்று இருக்கும். மதுரையில இப்படி ஒரு பிளேஸ் இருக்குன்னு தெரியாதவங்க இந்த பிளேஸ்க்கு போய் வெரைட்டியான ஜூஸ் குறிப்பா 750ml ஜூஸ ட்ரை பண்ணி பாருங்க மக்களே.

First published:

Tags: Juice Shop, Local News, Madurai, Tamil News