முகப்பு /மதுரை /

உலக தண்ணீர் தினம்.. மதுரை லேடி டோக் கல்லூரியில் மாணவிகள் உறுதிமொழி ஏற்பு!

உலக தண்ணீர் தினம்.. மதுரை லேடி டோக் கல்லூரியில் மாணவிகள் உறுதிமொழி ஏற்பு!

X
மதுரையில்

மதுரையில் உலக தண்ணீர் தினஉறுதிமொழி

World Water Day | மதுரையில் உள்ள லேடி டோக் கல்லூரியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 5000 மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து உறுதிமொழி ஏற்றனர்.

  • Last Updated :
  • Madurai, India

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு,மதுரை உள்ள தனியார் கல்லூரியில் 5000 மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள லேடி டாக் கல்லூரியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 5000 மாணவிகள்,5000 கையெழுத்துகள் என்ற வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி அரங்கில் 5000 மாணவிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், ‘யங் இந்தியா’ மற்றும் ‘கிளைமேட் சேஞ்ச்’ அமைப்பைச் சேர்ந்த பொன் குமார், தண்ணீரின் பயன்கள் பற்றி, தண்ணீர் சேமிப்பு பற்றியும், நம்முடைய வாழ்க்கையில தண்ணீரின் தேவை பற்றியும், இடத்திற்கு தகுந்தார் போல் தண்ணீரை எவ்வாறு பயன்படுத்துவது என்று தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என 5000 பேருடன் இணைந்து கலந்துரையாடினார்.

மேலும் அரங்கில் உள்ள 5 ஆயிரம் மாணவிகள் ஆசிரியர்கள் எழுந்து நின்று ’இது என் பூமி என் தேசம், ஒவ்வொரு நீரை சேமிப்பதும் நம் தேசம் மற்றும் பூமியின் நீர் நிலைகளை பாதுகாப்பது என் முதல் கடமை என்று உளமாற உறுதியளிக்கிறேன்’ என்று அனைவரும் உறுதியளித்தனர்.

பின்னர்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள பேனரில் மாணவர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் கையெழுத்திட்டு உலக தண்ணீர் தினத்திற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

First published:

Tags: Local News, Madurai, Water