முகப்பு /செய்தி /மதுரை / மதுரை சித்திரை திருவிழாவில் சோகம்... 5 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

மதுரை சித்திரை திருவிழாவில் சோகம்... 5 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

கள்ளழகர்

கள்ளழகர்

மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கிய நிகழ்வின் போது, 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண லட்சக்கணக்கானோர் குவிந்தனர். இதனை பயன்படுத்தி, ஒரு கும்பல் பொதுமக்களை தாக்கி நகை பணம் உள்ளிட்டவற்றை பறித்துள்ளது. இதில் 7 பேர் காயமடைந்த நிலையில், வழிப்பறி கும்பலில் இருந்த எம்.கே.புரத்தைச் சேர்ந்த சூர்யபிரகாஷ், மதிச்சியம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று, திருவிழாவில் வேடம் அணிந்து பங்கேற்ற ஆட்டோ ஓட்டுநர் சுடலைமுத்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

top videos

    இதற்கிடையே, நீரில் மூழ்கிய நிலையில் 3 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மதுரை விளாச்சேரி பகுதியை சேர்ந்த சிறுவன் பிரேம்குமார் உடல் கல்பாலம் அருகே மீட்கப்பட்டுள்ளது. திருநகர் பகுதியைச் சேர்ந்த ரவி மற்றும் அடையாளம் தெரியாத இளைஞர் ஆகியோரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலில் நீரில் மூழ்கி பலியாகினரா அல்லது வேறு காரணமா என விசாரணை நடைபெற்று வருகிறது.

    First published:

    Tags: Died, Madurai